பால் மில்கிரோம்

பால் ராபர்ட் மில்கிரோம் (Paul Robert Milgrom பிறப்பு ஏப்ரல் 20, 1948) ஓர் அமெரிக்க பொருளாதார நிபுணர் . இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மனிதநேயம் மற்றும் அறிவியல் துறை பேராசிரியராக 1987 ஆம் ஆண்டு முதல் உள்ளார். மில்கிரோம் ஆட்டக் கோட்பாட்டில் நிபுணர், குறிப்பாக ஏலக் கோட்பாடு மற்றும் விலை உத்திகள். ஏலக் கோட்பாட்டின் மேம்பாடுகள் மற்றும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக ராபர்ட் பி. வில்சனுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டு பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசை வென்றார்.[1]

நான்சி ஸ்டோக்கி என்பவருடன் இணைந்து வர்த்தகம் இல்லாத தேற்றத்தினை உருவாக்கியவர் ஆவார். இவர் ஆக்னாமிக்ஸ் உட்பட பல நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆவார். [2] இந்த நிறுவனம் சிக்கலான வணிக ஏலம் மற்றும் பரிமாற்றங்களுக்கான திறமையான சந்தைகளை உருவாக்குவதற்கான மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.

மில்கிரோம் மற்றும் அவரது ஆய்வறிக்கை ஆலோசகரான ராபர்ட் பி. வில்சன் எந்த தொலைபேசி நிறுவனம் எந்த செல்லுலார் அதிர்வெண்களைப் பெறுகிறது என்பதை தீர்மானிக்க FCC பயன்படுத்தும் ஏல நெறிமுறையை வடிவமைத்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பள்ளி தொகு

பால் மில்கிரோம் ஏப்ரல் 20, 1948 இல் மிச்சிகனில் உள்ள டிட்ராயிட்டில் பிறந்தார், [3] ஆபிரகாம் ஐசக் மில்கிரோம் மற்றும் அன்னே லிலியன் ஃபிங்கெல்ஸ்டீன் ஆகியோருக்கு நான்கு மகன்களில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது குடும்பம் மிச்சிகனில் உள்ள ஓக் பார்க் சென்றது. மில்கிரோம் டூயி பள்ளியிலும் பின்னர் ஓக் பார்க் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.

பொருளியலுக்கான நோபல் பரிசு தொகு

அக்டோபர் 2020 இல், ராயல் சுவீடிய அகாதமி ஆஃப் சயின்சஸ், மில்கிரோம் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு கூட்டாக நோபல் நினைவு பரிசை வழங்கியதாகக் கூறியது, ஏனெனில் அவர்கள் "பாரம்பரிய வழிகளில் அதாவது, வானொலி அதிவெண்கள் மூலமாக விற்க கடினமாக இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய ஏல வடிவங்களை வடிவமைக்க தங்கள் நுண்ணறிவினை பயன்படுத்தினர் எனக் கூறியுள்ளது. இவர்களின் இந்த கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயனளித்துள்ளன. [4]

சான்றுகள் தொகு

  1. Royal Swedish Academy of Sciences(October 12, 2020). "The Prize in Economic Sciences 2020". செய்திக் குறிப்பு.
  2. Auctionomics
  3. "Curriculum Vitae". Archived from the original on 2017-08-13. பார்க்கப்பட்ட நாள் 2009-02-07.
  4. Royal Swedish Academy of Sciences(October 12, 2020). "The Prize in Economic Sciences 2020". செய்திக் குறிப்பு.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_மில்கிரோம்&oldid=3360354" இலிருந்து மீள்விக்கப்பட்டது