பாவாய் நடனம்
பாவாய் நடனம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடப்படும் பிரபலமான நாட்டுப்புற நடனம் ஆகும். இது பெரும்பாலும் வரிசையாக ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட பானைகளைத் தலையில் சுமந்து கொண்டு பெண்களால் ஆடப்படும் ஒரு வகை பானை நடனமாகும்.[1]
நடன முறை
தொகுஆண் அல்லது பெண் கலைஞர்கள் ஏராளமான மண் பானைகள் அல்லது பித்தளை குடங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி தலையில் சுமந்து சமநிலை பிறழாமல் சுழன்று நடனமாடி பார்வையாளா்களை தன் வயப்படுத்துகின்றனா்.[2] இவ்வாறு குடங்கள் அல்லது பானைகளை சுமந்து கொண்டு இரு வாள்களில் நடந்தோ அல்லது ஒரு பித்தளை தாம்பாளத்தின் (தாலி அல்லது தட்டு) விளிம்பில் தங்கள் கால்விரல்களால் பற்றி நடந்து கொண்டு இந்த நடனத்தை ஆடுகிறார்கள். [3]
இந்தியாவின் முதல் பவாய் நடனக் கலைஞர் ஜோத்பூரில் (ராஜஸ்தான்) பிறந்த திருமதி. கிருஷ்ணா வியாஸ் சாங்கனி ஆவார்
இந்த நடன வடிவத்தில் தலையில் துணியால் மூடிய பெண் நடனக் கலைஞர்கள் தலையில் ஏழு அல்லது ஒன்பது பித்தளை குடங்களை சமப்படுத்தி அடுக்கி வைத்துக் கொண்டு சுறுசுறுப்புடன் நடனமாடுகிறார்கள். பின்னர் கண்ணாடி துண்டுகளில் மேல் இசைக்கேற்றவாறு குதித்தும், வாளின் விளிம்பில் தங்கள் கால்களால் நடந்தும் இந்த நடனத்தை ஆடுகிறார்கள். நடனத்தில் மயிர்கூச்சொியும் சாகசங்கள் பார்வையாளர்களை நாற்காலியின் விளிம்பிற்கே இட்டுச்செல்லும்.
இசைக் கருவிகள் மற்றும் உடைகள்
தொகுஆண் இசைக்கலைஞர் பின்னணி இசையை வாசித்து பவாய் நடனத்திற்கு உறுதுணை புரிகின்றனா். பொதுவாக ஒரு மெல்லிசையுடன் ராஜஸ்தானி நாட்டுப்புற பாடல் இசைக்கலைஞர்களால் பாடப்படுகிறது. இது பவாய் நடனத்தின் அழகை அதிகரிக்கச் செய்கிறது. பக்வாஜா, தோலக், ஜான்ஜார், சாரங்கி, ஆர்மோனியம் போன்ற பல கருவிகள் இசைக்கப்படுகின்றன. இது பவாய் நடனத்தின் பின்னணி இசையாக இருக்கும். நடனக் கலைஞர்கள் பாரம்பரியமாக வண்ணமயமான ராஜஸ்தானி ஆடைகளை அணிந்துகொண்டு அழகாக தங்களை அலங்கரித்துக் கொண்டும் நடனத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறார்கள்.
வரலாறு
தொகுஇந்த கலை வடிவம் அண்டை மாநிலமான குஜராத்தில் தோன்றியதாக நம்பப்படுகிறது. பின்னர் உள்ளூர் பழங்குடி ஆண்களும் பெண்களும் அதைத் தழுவி ஒரு தனித்துவமான ராஜஸ்தானிய பாணி சாயலில் பாவாய் நடனமாக மாறியதாக கூறப்படுகிறது.[4] பாரம்பரியமாக, இந்த வகை நடனத்தை ராஜஸ்தானின் ஜாட், பில், ராய்கர், மீனா, கும்ஹர் மற்றும் கல்பெலியா சமூகங்களைச் சேர்ந்த பெண் கலைஞர்கள் இந்த நடனத்தை ஆடுகின்றனா். ராஜஸ்தான் இயற்கையிலேயே வறண்ட நிலமாதலால் பெண்கள் பாலைவனத்தில் நீண்ட தூரத்திற்கு பானைகளில் தண்ணீரில் கொண்டு செல்ல வேண்டி இருந்ததது. இந்த சமூகங்களின் பெண்களின் பல பானைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சமநிலை பிறழாமல் தண்ணீரை லாவகமாக கொண்டு செல்லும் திறன்களை பெற்று இருந்தனா். இதிலிருந்து உருவான திறனே பாவாய் நடனத்தில் பானைகள் சமநிலை பேணுதலுக்கான காரணியாகக் கருதப்படுகிறது. [5]
பாவாய் நடன விழாக்கள்
தொகுபல்வேறு சந்தர்ப்பங்களில் பவாய் நடனம் நிகழ்த்தப்படுகிறது. பண்டிகை காலங்களிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் பவாய் நடன நிகழ்ச்சியைக் காணலாம். நாட்டுப்புற நடனத்தின் வேகமாக மறைந்து கொண்டிருக்கும் இந்த பாரம்பரியத்தை புதுப்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்த நாட்டுப்புற கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் பல அரசு சாரா நிறுவனங்களும் தீவிர பங்கு வகிக்கின்றன. இந்த நாட்டுப்புற நடனக் கலை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் ஊக்குவிக்கப்படுகிறது.[6]
மேலும் காண்க
தொகு- இந்தியாவில் நடனம்
- கூமர் : கூமர் இந்தியாவின் ராஜஸ்தானின் பாரம்பரிய பெண்கள் நாட்டுப்புற நடனம்
- ராஜஸ்தானி மக்கள்
- ராஜஸ்தான்
- புஷ்கர் ஏரி : மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் புஷ்கர் நகரில் அமைந்துள்ளது. புஷ்கர் ஏரி இந்துக்களின் புனித ஏரி
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://www.rajasthandirect.com/culture/dance/bhavai
- ↑ http://www.indianfolkdances.com/bhawai-folk-dance-rajasthan.html
- ↑ https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/02/19143917/Dancing-pleases-pot.vpf
- ↑ https://www.rajasthandirect.com/culture/dance/bhavai
- ↑ https://www.utsavpedia.com/cultural-connections/bhavai-dance/
- ↑ https://www.rajasthandirect.com/culture/dance/bhavai