பா. சு. மணி (11.9.1936 - 3.5.2015) கர்நாடக மாநிலம் பெங்களூரில் வாழ்ந்த தமிழ் பத்திரிக்கையாளர். தினச்சுடர் (தமிழ் மாலை இதழ்), சஞ்சேவாணி (கன்னட மாலை இதழ்) ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார்.[1]

வாழ்க்கை தொகு

இவர் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகில் உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். எம்.ஏ தமிழ் இலக்கியத்தில் சென்னை பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். முனைவர் பட்டத்தையும் பெற்றார். துவக்கத்தில் தினத்தந்தி, மாலை முரசு ஆகிய நாளேடுகளில் செய்தி ஆசிரியராகப் பணியாறினார். பிறகு 1964-ஆம் ஆண்டு பெங்களூரின் முதல் தமிழ் நாளிதழான தினச்சுடர் தமிழ் இதழைத் தொடங்கினார்.அதேபோல, 1982-இல் சஞ்சேவாணி என்ற கன்னட மாலை நாளிதழைத் தொடங்கி நடத்தினார்.[2]

எழுதிய நூல்கள் தொகு

மர்ம மாளிகை, உடைந்த வீணை ஆகிய சிறுகதை நூல்கள், செய்தி பிறந்த கதை என்ற இதழியல் அனுபவ நூல், இளவரசி கயல் கன்னி, ஜெனரல் சுந்தரம், சம்சாரி ஆன சந்நியாசி, நாற்காலிப் பாட்டி ஆகிய புதினங்கள், அரிஸ்டாட்டில் கவுடில்யருடன் திருவள்ளுவர், ஆய்வின் இமயம் தெ.பொ.மீ ஆகிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.

குடும்பம் தொகு

இவரின் மனைவி அழகு, மகன் அமுதவன், மகள்கள் பொருள், தேன்மொழி, அகிலா ஆகியோர் ஆவர்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._சு._மணி&oldid=2716174" இலிருந்து மீள்விக்கப்பட்டது