பா. டெனீஸ்வரன்

பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் (Balasubramaniam Deniswaran) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

பா. டெனீஸ்வரன்
B. Deniswaran
இலங்கை, வட மாகாண சபை மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2013
மன்னார் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதமிழீழ விடுதலை இயக்கம்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முன்னாள் கல்லூரிபுனித சேவியர் ஆண்கள் தேசியப் பாடசாலை, மன்னார்
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இலங்கையின் மன்னாரில் வழக்கறிஞராகப் பணியாற்றும் டெனீஸ்வரன்[1] மன்னார் புனித சேவியர் ஆண்கள் தேசியப் பாடசாலையில் கல்வி கற்றவர்.

அரசியலில் தொகு

2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு 12,827 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[2][3]

இவர் வட மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சராக முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனால் பரிந்துரைக்கப்பட்டு[4][5] 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "Mannar Bar Association elects new president". தமிழ்நெட். 18 மார்ச் 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17495. 
  2. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-15. 
  3. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  4. "ITAK announces NPC ministers, EPRLF challenges". தமிழ்நெட். 10 October 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36734. 
  5. "Sri Lanka's first Tamil CM announces Cabinet". தி நியூ இந்தியன் எக்சுபிரசு/பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 10 அக்டோபர் 2013. http://newindianexpress.com/world/Sri-Lankas-first-Tamil-CM-announces-Cabinet/2013/10/10/article1829560.ece. 
  6. "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736. 
  7. "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்ஸ். 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._டெனீஸ்வரன்&oldid=3327627" இலிருந்து மீள்விக்கப்பட்டது