பிக்குணி (bhikkhunī) (பாளி: bhikṣuṇī) பௌத்த சமயத்தை சார்ந்த மடத்தின் பெண் துறவியை பிக்குணி என்பர். ஆண் துறவியை பிக்கு என்பர்.

இந்தியாவில் பிறந்த திபெத்திய பௌத்த பிக்குணி
தைவான் நாட்டு பிக்குணி
பிச்சை எடுக்கும் சீனாவின் பிக்குணி

பிக்குகள் மற்றும் பிக்குணிகள் கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான உபாலி என்பவர் வகுத்த விநயபிடகம் என்ற பௌத்த துறவிகள் பின்பற்ற வேண்டிய நெறிகளின்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். [1] [2]

முதல் பிக்குணிகள்

தொகு

கௌதம புத்தர் காலத்தில் ஒரு சில பிக்குனிகள் மட்டுமே இருந்தனர். அவர்களில் புகழ் பெற்ற பிக்குணிகளில் பௌத்த சாத்திரங்களின்படி, கௌதம புத்தரின் மனைவி யசோதரை, அத்தை மற்றும் புத்தரின் வளர்ப்புத் தாயான மகாபிரஜாபதி கௌதமி ஆகியோர் முதன் முதலில் பௌத்த சமயத்தில் சேர்ந்து பிக்குணீகளாக வாழ்ந்தனர்.

தமிழ்நாடு

தொகு

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோவலன்-மாதவி இணையரின் மகள் மணிமேகலை தமிழ்நாட்டின் முதல் பௌத்த பிக்குணியாக அறியப்பட்டவள்.

பிக்கு நெறிகள்

தொகு

மகாயாண பௌத்தப் பிரிவில் மட்டுமே பெண்கள் பிக்குணிகளாக சேர்க்கப்படுகிறார்கள். பிக்குணிகளுக்கென தனி மடாலயங்கள் உள்ளன. பிக்குணிகள் சமைத்து உண்ணாது பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பது வினய பீடகத்தின் விதிகளில் ஒன்றாகும்.

மகாயாண பௌத்தப் பிரிவை பின்பற்றும் கொரியா, வியட்நாம், சீனா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் மட்டுமே சிறிய அளவில் பெண்களை பௌத்த மடாலயத்தில் பிக்குணி என்ற பெயரில் சீடர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். திபெத்திய பௌத்தப் பிரிவில் பெண்களை பிக்குணிகளாக மடங்களில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

பௌத்த சமயத்தில் ஆண் பிக்குகள் போன்று பெண் பிக்குணிகள் நிர்வாணத்தை அடையமுடியும்.

தற்காலத்தில் பெண்களை பிக்குணிகளாக பௌத்த சமயப் பிரிவுகள் ஏற்பது குறைந்து கொண்டே வருகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்குணி&oldid=4057741" இலிருந்து மீள்விக்கப்பட்டது