பிக் பிரதர்
பிக் பிரதர் (Big Brother) என்பது 1999 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து நாட்டில் டச்சு மொழியில் ஒளிபரப்பான உண்மைநிலை போட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி ஜான் டி மோல் ஜூனியரால் உருவாக்கினார். பின்னர் சர்வதேச அளவில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.[1]
பிக் பிரதர் | |
---|---|
உருவாக்கம் | ஜான் டி மோல் ஜூனியர். |
தயாரிப்பு நிறுவனங்கள் | எண்டெமால் (1999–2015) எண்டெமால் ஷைன் குழு(2015–2020) பானிஜய் குழு(2020–) |
ஒளிபரப்பு | |
ஒளிபரப்பான காலம் | செப்டம்பர் 16, 1999 ஒளிபரப்பில் | –
வெளியிணைப்புகள் | |
[Big Brother இணையதளம்] |
இந்த நிகழ்ச்சியில் ஒரு தொகை பணத்திற்க்காக "அவுஸ்மேட்சு" அல்லது "அவுசுஜெசுட்ஸ்" என்று அழைக்கப்படும் போட்டியாளர்கள் அவர்கள் வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட விசேஷமாக கட்டப்பட்ட வீட்டில் அவர்களுக்கு கொடுக்கப்படும் போட்டிகளில் வென்று எப்படி ஒன்றாக வாழ்கின்றனர் என்பது தான் இதன் நோக்கம். அங்கு அவர்களுடைய தினசரி வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதையும், சக போட்டியாளர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக ஒளிபரப்புகிறார்கள். ஒவ்வொருவரின் நடவடிக்கைகளுக்கும் நேயர்கள் வாக்களிப்பார்கள், அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு இறுதி வரை தாக்குப்பிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக பிரபல இந்தி நடிகை சில்பா செட்டி பங்கேற்றார். இதற்காக அவர் சுமார் சுமார் ரூ.3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Drotner, Kirsten. "New Media, New Options, New Communities?" (PDF) (PDF). Nordicom. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
{{cite web}}
: CS1 maint: url-status (link)