பிஜ்பெஹாரா

பிஜ்பெஹாரா (Bijbehara) என்பது இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும், பேரூராட்சியுமாகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை -1ஏ (பழைய நெடுஞ்சாலை) இல் அமைந்துள்ளது. சினார் மரங்களுக்கு பெயர் பெற்ற இரண்டு சினார் தோட்டங்கள் (பாத்ஷாஹி பாக் மற்றும் தாராஷுகோ தோட்டம்) இருப்பதால் பிஜ்பெஹாரா நகரம் "சினார் நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. பிஜ்பெஹாரா இப்பகுதியில் பழமையான சினார் மரத்தின் தாயகமாகும். ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரான சிறிநகரிலிருந்து 45 கிமீ (28 மைல்) தொலைவில் இந்த நகரம் அமைந்துள்ளது.

பிஜ்பெஹாரா
விஜிப்ரோர்
நகரம்
பிஜ்பெஹாராவின் காட்சி
பிஜ்பெஹாராவின் காட்சி
பிஜ்பெஹாரா is located in ஜம்மு காஷ்மீர்
பிஜ்பெஹாரா
பிஜ்பெஹாரா
ஜம்மு காஷ்மீரில் பிஜ்பெஹராவின் அமைவிடம்
பிஜ்பெஹாரா is located in இந்தியா
பிஜ்பெஹாரா
பிஜ்பெஹாரா
பிஜ்பெஹாரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°48′N 75°06′E / 33.80°N 75.10°E / 33.80; 75.10
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர்
மாவட்டம்அனந்த்நாக்
ஏற்றம்
1,591 m (5,220 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்22,789 - தகியா பால் மற்றும் காட் ஹன்ஜிபோரா தவிர
மொழிகள்
 • அலுவல்காஷ்மீரி, உருது, இந்தி, தோக்ரி, ஆங்கிலம்[1][2]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஜேகே03

சொற்பிறப்பியல்

தொகு

பிஜ்பெஹாரா அல்லது விஜ்போர் அல்லது விஜ்ப்ரோர் என்ற சொல் விஜயேசுவர் என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இது இந்துக் கடவுளான சிவன் விஜயேசுவரராக குடிகொண்டிருக்கும் பழங்கால தளமாகும்.[3]

நிலவியல்

தொகு
 
பிஜ்பெஹராவின் ஆப்பிள்கள்

பிஜ்பெஹாரா 33.80 ° வடக்கிலும் 75.10 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[4] இது சராசரியாக 1,591 மீட்டர் (5,223 அடி) உயரத்திலுள்ளது.

மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களில் ஒன்றான பிஜ்பெஹாரா, மாவட்ட தலைமையகத்தின் வடக்கே ஜீலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, இது உள்நாட்டில் "வேத்" என்று பிரபலமாக அறியப்படுகிறது. பிஜ்பெஹாரா அனந்தநாக் நகரிலிருந்து நான்கு மைல் வடக்கே அமைந்துள்ளது.

புள்ளிவிவரங்கள்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 22,789 (12,057 ஆண்கள் மற்றும் 10,732 பெண்கள்) ஆகும்.[5] பிஜ்பெஹாராவின் மொத்த மக்கள்தொகையில் 0–6 வயதுடைய குழந்தைகள் 14.97% (3,411).

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  2. "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020. 
  3. Cultural Heritage of Jammu and Kashmir, p.161
  4. "Maps, Weather, and Airports for Bijbiara, India". பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
  5. "Bijbehara City Population Census 2011 - Jammu and Kashmir". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2016-06-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜ்பெஹாரா&oldid=3507840" இலிருந்து மீள்விக்கப்பட்டது