பிணைப்பாற்றல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிணைப்பாற்றல் (Binding energy) என்பது அணுக்கருவிலுள்ள புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் தனியாகப் பிரித்து எடுக்க அணுக்கருவிற்குக் கொடுக்கப்பட வேண்டிய ஆற்றலாகும்.இவ்வாற்றலுடன் அவைகள் பிணைக்கப்பட்டுள்ளன. ஒரு புரோட்டானின் அல்லது நியூட்ரானின் பிணைப்பாற்றல் என்பது அதனைக் கருவிலிருந்து பிரித்து எடுக்கத் தேவையான ஆற்றலாகும். அதுபோல் ஒரு எலக்ட்ரானை விடுவிக்கத் தேவையான ஆற்றல், எலக்ட்ரானின் பிணைப்பாற்றலாகும்.