பிண்டு (Bhind) மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் வடக்கில் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த பிண்டு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.இது மாநிலத் தலைநகர் போபால் நகரத்திற்கு வடக்கே 514 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 46 போபால்-பிண்டு நகரங்களை இணைக்கிறது.

பிண்டு
நகரம்
Madhya Pradesh Bhind district
Madhya Pradesh Bhind district
பிண்டு
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிண்டு நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°33′31″N 78°47′14″E / 26.5587°N 78.7871°E / 26.5587; 78.7871
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பிண்டு
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,97,585
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30
அஞ்சல் சுட்டு எண்
477 001
வாகனப் பதிவுMP-30

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 39 வார்டுகளும், 33,592 வீடுகளும் கொண்ட பிண்டு நகரத்தின் மக்கள் தொகை 197,585 ஆகும். அதில் ஆண்கள் 105,352 மற்றும் 92,233 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 875 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 25358 (13%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 39,267 மற்றும் 1,832 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 86%, இசுலாமியர் 6.3%, பௌத்தர்கள் 0.38%, சமணர்கள் 6.9% மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.[1]

இரயில் நிலையம்

தொகு

பிண்டு இரயில் நிலையம் ஜான்சி, குவாலியர், இட்டாவா நகரங்களை இணைக்கிறது. [2]

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிண்டு&oldid=3695972" இலிருந்து மீள்விக்கப்பட்டது