பிதர் (திரைப்படம்)

பிதர் (Pedar, பாரசீக மொழி: پدر ) என்பது 1996 ஆம் ஆண்டு வெளி வந்த ஈரானியத் திரைப்படம் ஆகும். இதற்கு தமிழில் தந்தை என்று பொருள். இத்திரைப்படத்தை மசித் மசிதி இயக்கியுள்ளார். இது பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வாங்கியுள்ளது. ஈரானிலும் சர்வதேச அளவிலும் விருதுகளைப் பெற்ற திரைப்படம் இது.

பிதர்
கதைமசித் மசிதி, சையது மெஹ்தி ஷோஜாய்
நடிப்புஹாஸன் சடேஹி, ஹூசைன் அபிடினி, மொகம்மது காஸிபி, பரிவாஷ் நஸாரியா
ஓட்டம்96 நிமிடங்கள்
மொழிபாரசீக மொழி

கதை தொகு

14 வயது மெஹ்ருல்லா தனது தந்தையின் மரணத்திற்குப் பின் குடும்பத்தைக் காப்பாற்ற நகரத்திற்கு வேலைக்குச் செல்கிறான். பின்னர் ஒரு நாள் திரும்பி வரும் போது, மெஹ்ருல்லாவின் தாய் ஒரு காவலரைத் திருமணம் செய்து கொண்டு பெரிய வீடொன்றுக்குக் குடி பெயர்ந்துவிட்ட செய்தியை அவனுடைய நண்பன் லத்தீஃப் சொல்கிறான். மெஹ்ருல்லாவால் அவனது வளர்ப்புத் தந்தையை ஏற்க முடியவில்லை. மேலும் அன்னையின் மீதும் கோபம் கொள்கிறான். மெஹ்ருல்லா தனது பழைய வீட்டில் போய் வசிக்க ஆரம்பிக்கிறான். அவனது சகோதரிகளையும் அவனுடன் வைத்துக் கொள்கிறான். மெஹ்ருல்லா உடல் நலம் சரியிலாத போது லத்தீப் மெஹ்ருல்லாவின் வளர்ப்புத் தந்தையிடம் விஷயத்தைச் சொல்கிறான். அவர் மெஹ்ருல்லாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்கிறார். உடல் நலம் சரியானதும் அவரின் துப்பாக்கியைத் திருடிக்கொண்டு மெஹ்ருல்லா, லத்தீப் இருவரும் நகரத்திற்குச் செல்கின்றனர். மெஹ்ருல்லாவின் வளர்ப்புத் தந்தை அவரது மோட்டார் வண்டியில் நகரத்திற்கு வந்து இருவரையும் கைது செய்கிறார். லத்தீபை பேருந்தில் அனுப்பிவிட்டு மெஹ்ருல்லாவை அவரது மோட்டார் வண்டியில் வீட்டிற்குக் கூட்டிச் செல்கிறார். வழியில் மோட்டார் வண்டி பழுதாகிறது. இருவரும் பாலைவனத்தில் தனியாக நிற்கின்றனர். மெஹ்ருல்லா அவனது வளர்ப்புத் தந்தையை முதன்முறையாகப் புரிந்து கொள்கிறான். அவரின் மேலும் அம்மாவின் மேலும் உள்ள கோபம் இல்லாமலாகிறது.

நடிகர்கள் தொகு

  • மெஹ்ருல்லாவாக ஹாஸன் சடேஹி (Hassan Sadeghi)
  • லத்தீஃபாக ஹூசைன் அபிடினி (Hossein Abedini)
  • வளர்ப்புத் தந்தையாக மொகம்மது காஸிபி (Mohammad Kasebi)
  • மெஹ்ருல்லாவின் அம்மாவாக பரிவாஷ் நஸாரியா (Parivash Nazarieh)

விருதுகள் தொகு

  • கிரிஸ்டல் சிமோர்க் ஃபாஜர் திரைப்பட விழா (Crystal Simorgh Fajr Film Festival-1996)
  • சான் ஜெபாஸ்ட்டியன் சர்வதேச திரைப்பட விழா ( Prize of the Jury San Sebastián International Film Festival-1996)
  • டொரினோ சர்வதேச திரைப்பட விழா (C.I.C.A.E. Award, Holden Award for the Best Script, Jury Special Prize Torino International Festival of Young Cinema-1996)
  • கோல்டன் டால்ஃபின் பெஸ்ட்ரோயா சர்வதேச திரைப்பட விழா (Golden Dolphin Festróia - Tróia International Film Festival-1997)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிதர்_(திரைப்படம்)&oldid=2129595" இலிருந்து மீள்விக்கப்பட்டது