பித்தாம்புரா தொலைக்காட்சி கோபுரம்

தொலைக்காட்சி கோபுரம்

பித்தாம்புரா தொலைக்காட்சி கோபுரம் (Pitampura TV Tower) என்பது 235-மீட்டர் (771 ft) உயரமுடைய பெரிய தொலைக்காட்சி கோபுரம் ஆகும். இது இந்தியாவின் தில்லி மாநகரில் பித்தாம்புராவில் 1988ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளைக் காணக்கூடிய காட்சியிடம் ஒன்றும் உள்ளது.

திலி ஹாத், பித்தாம்புரா தொலைக்காட்சி கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1] இந்த கோபுரத்தை அண்ணல் அம்பேத்கர் தொலைக்காட்சிக் கோபுரமாக 10 ஏப்ரல் 1992இல் தகவல் மற்றும் ஒளிபரப்பு இணை அமைச்சர் அஜீத் குமார் பஞ்சாவால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

வரலாறுதொகு

இந்த தொலைக்காட்சி கோபுரம் 1988இல் புதுடெல்லியின் மிகப்பெரிய வணிக மாவட்டத்தில் கட்டப்பட்டது. பித்தாம்புராவில் உள்ள நேதாஜி சுபாசு இடம் தில்லி மக்களின் முக்கிய உள்ளூர் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.[சான்று தேவை] தில்லியின் இரண்டாவது திலி ஹாத், எனும் பாரம்பரிய உணவு மற்றும் கைவினைப் பஜார், டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத்தால் பிதாம்புராவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்த தொலைக்காட்சி கோபுரத்திற்கு அருகில் 7.2 ஹெக்டேர் பரப்பளவில் ஏப்ரல் 2008இல் நிறுவப்பட்டு.[2] இதன் அருகில் பிதாம்புரா விளையாட்டு வளாகமும் உள்ளது.

 
பித்தாம்புரா தொலைக்காட்சி கோபுரம்
 
பித்தாம்புரா டிவி கோபுரம்

அக்டோபர் 2010இல், இந்திய இராணுவ விண்வீழ் விளையாட்டு குழுவின் அதிகாரி சத்யேந்திர வர்மா 235 மீட்டர் உயரமுள்ள கோபுரத்திலிருந்து வெள்ளிக்கிழமை குதித்து இந்தியாவின் முதல் விண்வீழ்வினை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.[3][4][5] 5 ஜனவரி 2013 அன்று 200மீ உயரத்தில் கோபுரத்திற்குள் இரவு 10:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது மற்றும் இதைக் 15 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு கட்டுப்படுத்தியது.

பொது அணுகல்தொகு

பாதுகாப்பு காரணங்களுக்காக, இக்கோபுரத்தினைப் பொதுமக்கள் காண அனுமதியில்லை.

அணுகல்தொகு

இது தில்லி மெட்ரோவின் தில்ஷாத்-ரித்தலா மெட்ரோ பாதையின் நேதாஜி சுபாஷ் மெட்ரோ நிலையத்தின் அருகே அமைந்துள்ளது. இந்த கோபுரத்திற்கு பித்தாம்புரா பகுதி மற்றும் புது தில்லியின் பித்தாம்புரா திலி ஹாத் அருகில் இருப்பதால் பித்தாம்புரா தொலைக்காட்சி கோபுரம் எனப் பெயரிடப்பட்டது. இது ஸ்ரீகுரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ளது.

மேலும் படிக்கதொகு

  • எச்சு. ஆர். விசுவநாத்து: புது தில்லியில் உள்ள தொலைக்காட்சி கோபுரம் உயரத்தில் சுழலும் உணவகத்துடன் (இந்தியா). இல்: IABSE கட்டமைப்புகள் C-50/89, ஆகத்து 1989, , எஸ். 50-51. (இங்கே இணையத்தில்)

மேற்கோள்கள்தொகு

 

  1. "Dilli Haat". மூல முகவரியிலிருந்து 1 August 2013 அன்று பரணிடப்பட்டது.
  2. "CM inaugurates Pitampura Haat". 14 Apr 2008. Archived from the original on 30 ஜூலை 2012. https://archive.is/20120730054519/http://www.expressindia.com/latest-news/cm-inaugurates-pitampura-haat/296391/. 
  3. "Armyman dares country's first BASE jump". 30 October 2010. Archived from the original on 21 ஏப்ரல் 2013. https://web.archive.org/web/20130421104812/http://www.hindu.com/2010/10/30/stories/2010103059620400.htm. 
  4. "Fall and rise of India’s first BASE jumper". 30 October 2010. http://www.indianexpress.com/news/fall-and-rise-of-indias-first-base-jumper/704754/. 
  5. "Pitampura Haat to be opened in November". 3 June 2007. Archived from the original on 21 செப்டம்பர் 2008. https://web.archive.org/web/20080921204229/http://www.hindu.com/2007/06/03/stories/2007060306560300.htm. 

ஆள்கூறுகள்: 28°41′50″N 77°09′01″E / 28.69721°N 77.15035°E / 28.69721; 77.15035