பினா சேத் இலஷ்கரி

பினா சேத் லஷ்கரி (Bina Sheth Lashkari)(பிறப்பு) இந்தியாவைச் சேர்ந்த இவர் வீடுகளுக்கேச் சென்று கற்பிக்கும் பள்ளியின் நிறுவனர் ஆவார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் 100,000 குழந்தைகளின் கல்வியை ஒழுங்கமைக்க இவர் உதவியுள்ளார். 2013 ஆம் ஆண்டில் இவருக்கு அனைத்துலக பெண்கள் நாள்அன்று இவருக்கு ஸ்த்ரீ சக்தி விருது வழங்கப்பட்டது.

பினா சேத் இலஷ்கரி
2013இல் பினா சேத்
தேசியம்இந்தியா
அறியப்படுவதுவீடுகளுக்கேச் சென்று கற்பிக்கும் பள்ளியின் நிறுவனர்

வாழ்க்கை தொகு

1988 ஆம் ஆண்டில் கொலாபாவில் உள்ள கஃப் பரேட்டில் தனது முதல் பள்ளியை நிறுவியபோது இவர் தனது பணியைத் தொடங்கினார். அந்த நேரத்தில் குடிசைப் பகுதிகளிலிருந்து வரும் குழந்தைகள் பணக்கார குழந்தைகள் ஆடம்பரமான பள்ளிகளுக்குச் செல்வதை மட்டுமே பார்க்க முடிந்தது. இவர் முதலில் 25 குழந்தைகளைக் கொண்டிருந்தார். அவர்களது லம்பாடி பெற்றோர் குறைந்த ஊதியத்தில் மீன் பிடித்தல் பணியை மேற்கொண்டிருந்தனர். [1] இவர் சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம் பெறும்போது இந்த யோசனைக்கு ஈர்க்கப்பட்டார். இவர் உள்ளூர் பள்ளிக்கு செல்லும்போது, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் பள்ளியைவிட்டு வெளியேறுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்தபோது, குழந்தைகள் அனைவரும் தங்கள் குடும்பங்களின் ஊதிய வருவாயில் ஒரு முக்கிய பகுதியாக இருப்பதைக் கண்டார். இரஜனி பரஞ்சேப் என்பவரின் உதவியுடன் அவர்கள் வீட்டு வாசலில் இருக்கக்கூடிய ஒரு பள்ளியைத் தொடங்கினார். [2]

விருதுகள் தொகு

 
2013, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் இல்லத்தில் திருமதி. பினா சேத் லஷ்கரிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, விருது வழங்குகிறார்.

2013 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாள் அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இவருக்கு ஸ்திரீ சக்தி விருதினை வழங்கினார். இந்த விருது புதுதில்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் இவருடன் சேர்த்து ஆறு பேருக்கு வழங்கப்பட்டது. கல்வி மற்றும் பயிற்சியின் பணிக்காக மகாராட்டிர மாநிலத்தால் இவர் பரிந்துரைக்கப்பட்டார். [3]

வளர்ச்சி தொகு

2016 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ச் கோமகனான இளவரசர் வில்லியம், மும்பையில் இவரை சந்தித்தார். [4] அந்த ஆண்டு பள்ளியின் பிரச்சாரம் அவர்களின் தெருக்களுக்கு மாணவர்களின் பெயரிட வழிவகுத்தது. மும்பையின் மூன்று பகுதிகளில் முன்னர் பெயரிடப்படாத வீதிகள் இவரது மாணவர்களின் பெயரிடப்பட்டன. மற்ற மாணவர்களுக்கு கல்வியைப் பெறவும், லட்சியமாகவும் இருக்க ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். [5]

2019 ஆம் ஆண்டில் 31 ஆண்டுகளில் மும்பையில் 100,000 குழந்தைகளின் கல்வியை ஒழுங்கமைக்க இவர் உதவியுள்ளார் என்று மதிப்பிடப்பட்டது. அந்த சமயத்தில் பள்ளியில் ஏழு பள்ளிப் பேருந்துகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் இரண்டரை மணி நேரம் பயணம் செய்து 100 குழந்தைகளுக்கு கற்பிக்கிறது. [6]

மேற்கோள்கள் தொகு

  1. "From Doorstep to On Wheels: How This Woman Taught Over 1 Lakh Slum Kids in 30 Yrs". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-12. பார்க்கப்பட்ட நாள் 2020-04-19.
  2. "This NGO is Motivating Slum Kids to Stay in School By Naming Alleys and Streets After Them". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-05-19. பார்க்கப்பட்ட நாள் 2020-04-19.
  3. "President Confers Stree Shakti Puruskar on International Women's Day". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  4. "Duke and Duchess visit".
  5. "This NGO is Motivating Slum Kids to Stay in School By Naming Alleys and Streets After Them". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-05-19. பார்க்கப்பட்ட நாள் 2020-04-19."This NGO is Motivating Slum Kids to Stay in School By Naming Alleys and Streets After Them". The Better India. 2016-05-19. Retrieved 2020-04-19.
  6. "From Doorstep to On Wheels: How This Woman Taught Over 1 Lakh Slum Kids in 30 Yrs". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-12. பார்க்கப்பட்ட நாள் 2020-04-19."From Doorstep to On Wheels: How This Woman Taught Over 1 Lakh Slum Kids in 30 Yrs". The Better India. 2019-11-12. Retrieved 2020-04-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினா_சேத்_இலஷ்கரி&oldid=3111591" இலிருந்து மீள்விக்கப்பட்டது