பியார் பிரேமா காதல்

2018 தமிழ்த் திரைப்படம்

பியார் பிரேமா காதல் (Pyaar Prema Kaadhal) என்பது 2018 ஆம் ஆண்டில் தமிழ்-மொழியில் ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் நடிப்பில் இசையை அடிப்படையாகக் கொண்ட ஒரு காதல் நகைச்சுவை திரைப்படமாகும்.[1][2]

பியார் பிரேமா காதல்
இயக்கம்எலன்
தயாரிப்புயுவன் சங்கர் ராஜா
எஸ்.என்.ராஜராஜன்
இர்பான் மாலிக்
கதைஎலன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஹரீஷ் கல்யாண்
ரைசா வில்சன்
ஒளிப்பதிவுராஜா பட்டாசார்ஜி
படத்தொகுப்புமணிகுமாரன் சங்கரா
கலையகம்ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ்
கே புரொடக்சன்
விநியோகம்டிரைடென்ட் ஆர்ட்ஸ்
வெளியீடு10 ஆகத்து 2018 (2018-08-10)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்த படத்தை இலன் எழுதி மற்றும் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒளிப்பதிவை ராசா பட்டாச்சார்சீயும் படத்தொகுப்பை மணிகூரனும் செய்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவும் எசு.என். ராசராசனும் தங்கள் படநிறுவனங்களான ஒய்.எசு.ஆர். பிலிம்சு மற்றும் கே தயாரிப்பு நிறுவனங்களின் சார்பாக படத்தை தயாரித்திருந்தனர்.[3]

இந்த திரைப்படம் திசம்பர் 2017 இல் முதன்மை புகைப்படம் எடுப்பதன் தொடக்கத்துடன் தொடங்கப்பட்டது மற்றும் ஜூன் 2018 இல் நிறைவடைந்தது. திரைப்படம் 10 ஆகஸ்ட் 2018 அன்று வெளியிடப்பட்டு, பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான பதிலைப் பெற்றது, முன்னணி நடிகர்களின் நடிப்பைப் பாராட்டியது, திரைக்கதை, மற்றும் படத்தின் ஒலிப்பதிவு. திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

கதைச் சுருக்கம்

தொகு

கதாநாயகன் ஸ்ரீ குமார் ஒரு அப்பாவி. ஐடி கம்பெனியில் வேலை செய்யும் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவன். கதாநாயகி சிந்துஜா பணக்கார மற்றும் சுதந்திரமான, எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் பெண். பக்கத்து அலுவலகத்தில் வேலை செய்து வந்த சிந்துஜா ஜன்னல் வழியாக காதல் செய்த ஸ்ரீ குமாருக்கு ஒரு நாள் அதிர்ச்சியாக தனது அருகிலேயே தனது அலுவலகத்தில் வந்து சேர்ந்தார் சிந்துஜா. காதலை சொல்ல தடுமாறும் ஸ்ரீ, சிந்துஜாவோ அவனை கிளப்புக்கு இயல்பாக கூட்டி செல்கிறார். இப்படியாக ஒரு நாள் இருவருக்குள்ளும் அன்பு அதிகமாகி, உடலுறவு வைத்துக் காெள்ளும் அளவிற்கு செல்கின்றனர். அந்த நேரத்தில் காதலிப்பதாக ஸ்ரீ சொல்ல, அதை மறுத்து இது நமக்குள் நடந்த சாதாரண உணர்வு தானே தவிர வேற ஒன்னும் இல்ல என்று சிந்துஜா சொல்ல தன்னால் தாங்க முடியாத ஸ்ரீ அழுகிறார்.

தனக்கான இலட்சியம் குறிக்கோள்கைள அடையும் வரையில் காதலோ, கல்யாணமோ, குழந்தையோ கிடையாது என்பதில் சிந்துஜா உறுதியாக இருந்தார். தாய்ப்பாசத்தில் தவித்த ஸ்ரீ அம்மா சொன்ன பெண்ணை திருமணம் செய்ய, மூன்று ஆண்டுகளிலேயே அவர்களுக்குள் விவாகரத்தும் ஆகிறது. இந்த மூன்று இடைவெளியில் தன்னுடைய இலட்சியங்களை அடைகிறார் சிந்துஜா. ஸ்ரீ-க்கு விவாகரத்து ஆனதை அறிந்த சிந்துஜா, மகிழ்ச்சியோடு ஸ்ரீ-யுடன் இணைந்து தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறார். ஸ்ரீ வீட்டிலும் நிச்சயத் திருமணத்தை விட, சிந்துஜா எதிர்பார்த்த லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை முறையே சரியானது என வரவேற்றனர். இப்படியாக கதை முடிகிறது.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த முதல் படமாகும், இந்த படத்தை எலன் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜா என்பவரே இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். மேலும் விவேக் மற்றும் மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

வெளியீடு

தொகு

இந்த படம் 9 ஆகத்து 2018, அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் சில நாள் முன்பு தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் மரணமடைந்ததை அடுத்து, இப்படம் 10 ஆகத்து அன்று வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Bigg Boss Tamil contestants Raiza, Harish Kalyan to romance on big screen". 31 October 2017.
  2. "Harish, Raiza team up for a romantic comedy".
  3. "Yuvan Shankar Raja advances 'Pyaar Prema Kaadhal' release date". Archived from the original on 4 August 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியார்_பிரேமா_காதல்&oldid=3941289" இலிருந்து மீள்விக்கப்பட்டது