பியோரைட்டு

அமுதக் கல் வடிவம்

பியோரைட்டு (Fiorite) என்பது (திரும்பும் அலகுகள்) SiO2·nH2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரேறிய சிலிக்கா கனிமப் போலி என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. அமுதக்கல் வகை கனிமமான இது எரிமலைச் சாம்பல் குழிகளில் காணப்படுகிறது. இது கோளவடிவம் கொண்ட திராட்சைக் கொத்துகள் அல்லது தொங்கும் சுண்ணாம்புப் பாறை வடிவ அமுதக்கல் வகையாகும். பியோரைட்டு கனிமப் போலி முத்து போன்ற பளபளப்பைக் கொண்டுள்ளது. திராட்சைக் கொத்துகள் போன்ற திரட்சிகளாக உருவாகிறது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர் சாண்டா பியோராவின் நினைவாக கனிமத்திற்கு பியோரைட்டு எனப் பெயரிடப்பட்டது. பியோரைட்டை ரத்தினக்கல்லாக பயன்படுத்தலாம்.[1]

பியோரைட்டு
Fiorite
பொதுவானாவை
வகைகனிமப்போலி
வேதி வாய்பாடுSiO2·nH2O
இனங்காணல்
படிக இயல்புகோளம்,திராட்சைக் கொத்து, அல்லது தலைகீழ் சுண்ணாம்புப்பாறை
முறிவுசங்கு
மிளிர்வுமுத்து

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Manutchehr-Danai, Mohsen (2000). Dictionary of Gems and Gemology. Springer-Verlag. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3540674825.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியோரைட்டு&oldid=4119836" இலிருந்து மீள்விக்கப்பட்டது