பிரகலாதன் கோபாலன்

கேரள அரசியல்வாதி

பிரகலாதன் கோபாலன் (Prahladan Gopalan) என்று பிரபலமாக அறியப்படும் புதியபுரயில் கோபாலன் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியாவார். இரண்டாவது கேரள சட்டமன்றத்தில் மாதாயி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பிரகலாதன் கோபாலன்
Prahladan Gopalan
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1960–1965
முன்னையவர்கே. பி.ஆர்.கோபாலன்
பின்னவர்கே. பி.ஆர்.கோபாலன்
தொகுதிமாதாய் சட்டமன்ற தொகுத
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
புதியபுரயில் கோபாலன்

1922 (1922)
மலபார் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு20 மே 1969(1969-05-20) (அகவை 46–47)
மலப்புறம், கேரளம், இந்தியா
பிள்ளைகள்5

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மலபார் மாவட்ட பள்ளி ஆசிரியையான ஆர்.குங்கிராமன் மாசுட்டர் மற்றும் பி.மாதவி அம்மா ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் ஒருவராக 1922 ஆம் ஆண்டு புதியபுரயில் கோபாலன் பிறந்தார். [1] இவரது தந்தை மகாத்மா காந்தியால் முன்வைக்கப்பட்ட தலித் மேம்பாட்டிற்காக பரவலாக விமர்சிக்கப்பட்ட ஒரு மனிதர் ஆவார். இதனால் சொந்த சமூகத்திடமிருந்தும் இவர் அவமானத்தை ஏற்க வேண்டியிருந்தது. [1]

கோபாலன் 1938 ஆம் ஆண்டில் தனது 16 ஆவது வயதில் பயிற்சி பெறாத ஓர் ஆசிரியரானார். அப்போது இவர் தனது தந்தை மேலாளராக இருந்த ஆர்.கே.யு.பி பள்ளியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் குருசன சபா என்ற கூட்டத்திற்கு எதிராக ஆசிரியர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டார். [1] இவரது தந்தை கூட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். கோபாலன் தனது சொந்த தந்தைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்ற காரணத்தால் இந்து புராணங்களில் உள்ள பிரகலாதனின் பெயரைச் சேர்த்து மக்கள் அழைக்கத் தொடங்கினர்.[1]

கோபாலன் 1969 ஆம் ஆண்டு மே மாதம் 20 அன்று தனது 47 ஆவது வயதில் மலப்புரத்தில் ஒரு சாலை விபத்தில் இறந்தார்.

தொழில் மற்றும் செயல்பாடு தொகு

கோபாலன் தனது தந்தைக்கு எதிராக போராடியதற்காக வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் பம்பாய்க்கு குடிபெயர்ந்தார். பம்பாயில் இருந்தபோது இந்திய தேசிய காங்கிரசால் ஈர்க்கப்பட்டார். பம்பாய் இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1940 ஆம் ஆண்டு தனது சொந்த இடத்தில் இளைஞர் காங்கிரசை உருவாக்குவதற்காக வீடு திரும்பினார். பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கம் உட்பட பல சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார். [2] சிறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்தார்.

1960 ஆம் ஆண்டு இரண்டாவது கேரள சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் கேபிஆர் கோபாலனை 261 வாக்குகள் வித்தியாசத்தில் பிரகலாதன் தோற்கடித்தார். [3] 1965 ஆம் ஆண்டில் மீண்டும் மூன்றாவது கேரள சட்டமன்றத்திற்கு போட்டியிட்டார், ஆனால் கேபிஆர் கோபாலனிடம் தோல்வியடைந்தார். கண்ணூர் மாவட்ட காங்கிரசு கமிட்டி தலைவராகவும் கோபாலன் பணியாற்றினார்.

சர்ச்சைகள் தொகு

1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பீச்சிக்கு செல்லும் வழியில் பி.டி.சாக்கோ என்ற சட்டமன்ற உறுப்பினரின் அலுவலக வாகனம் விபத்தில் சிக்கியது. [4] வாகனத்தில் பெண் ஒருவர் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. [4] பிரகலாதன் கோபாலன் 1964 ஜனவரி 30 அன்று தனது கட்சியிலிருந்து சாக்கோவை பதவியை துறக்கச் சொல்லி சட்டசபை முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதனால் பிப்ரவரி 16, 1964 அன்று சாக்கோ பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது [4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "കെ സുധാകരന്റെ ഭക്തർ ശവഘോഷയാത്ര നടത്തിയ പി രാമകൃഷ്ണന്‍ കോണ്‍ഗ്രസ്സിനുള്ളിലെ 'പടയാളി'യായിരുന്നു". azhimukham.com (in மலையாளம்). 2019-08-14. Archived from the original on 2022-05-17. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.
  2. "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.
  3. "Kerala Assembly Election Results in 1960". பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
  4. 4.0 4.1 4.2 "മുന്നണികളെ അടി തെറ്റിച്ച സ്ത്രീ സാന്നിദ്ധ്യങ്ങള്‍". woneminute.com (in மலையாளம்). 2020-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகலாதன்_கோபாலன்&oldid=3643065" இலிருந்து மீள்விக்கப்பட்டது