பிரசந்தா (Prachanda, (प्रचण्ड) எனப் பொதுவாக அழைக்கப்படும் புசுப்ப கமல் தகால் (Pushpa Kamal Dahal, நேபாளி: पुष्पकमल दाहाल; பிறப்பு: 11 திசம்பர் 1954) என்பவர் நேபாள அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் முன்னர் 2008 முதல் 2009 வரையும், மீண்டும் 2016 முதல் 2017 வரையும் நேபாலப் பிரதமராகப் பதவியில் இருந்தார்.

புசுப்ப கமல் தகால்
Pushpa Kamal Dahal

पुष्पकमल दाहाल
2016 இல் தகால்
நேப்பாளப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 திசம்பர் 2022
குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி
முன்னவர் செர் பகதூர் தேவ்பா
பதவியில்
4 ஆகத்து 2016 – 7 சூன் 2017
குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி
முன்னவர் கட்க பிரசாத் சர்மா ஒளி
பின்வந்தவர் செர் பகதூர் தேவ்பா
பதவியில்
15 ஆகத்து 2008 – 25 மே 2009
குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்
துணை பாம்தேவ் கௌதம்
முன்னவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா
பின்வந்தவர் மாதவ் குமார் நேபாள்
மேலதிக பொறுப்புகள்
நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 மார்ச் 2021
முன்னவர் எவருமில்லை
பதவியில்
1994–2018
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் எவருமில்லை
நேபாள பொதுவுடமைக் கட்சித் தலைவர்
பதவியில்
2018 – 8 மார்ச் 2021
உடன் பணியாற்றுபவர் கத்கா பிரசாத் ஓலி
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் எவருமில்லை
நேபாள பிரதிநிதிகள் சபை உறுப்பினர்
பதவியேற்பு
2023
முன்னவர் பாபுராம் பட்டாராய்
தொகுதி கோர்க்கா 2
பதவியில்
4 மார்ச் 2018 – செப்டம்பர் 2022
முன்னவர் கிருட்டிணா பக்த பொக்காரெல்
தொகுதி சித்வான் 3
சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
21 சனவரி 2014 – 14 அக்தோபர் 2017
முன்னவர் மகேந்திரா பசுவன்
பின்வந்தவர் எவருமில்லை
தொகுதி சிரகா 5
பதவியில்
28 மே 2008 – 28 மே 2012
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் இராசேந்திர குமார்
தனிநபர் தகவல்
பிறப்பு கணசியாம் தகால்
11 திசம்பர் 1954 (1954-12-11) (அகவை 68)
பொக்காரா, நேபாள இராச்சியம்
அரசியல் கட்சி நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) (1994–2018; 2021 முதல்)
பிற அரசியல்
சார்புகள்
வாழ்க்கை துணைவர்(கள்) சீதா பௌடல்
பிள்ளைகள் 4
படித்த கல்வி நிறுவனங்கள் வேளாண்மை மற்றும் விலங்கு அறிவியல் நிறுவனம்
பட்டப்பெயர்(கள்) பிரசந்தா

பொக்காராவில் பிறந்த பிரசந்தா, தனது இளமைக் காலத்தைப் பெரும்பாலும் சித்வனில் கழித்தார்.[1] இங்கு ராம்பூர் வேளாண்மை அறிவியல் கழகத்தில் டிப்புளோமா பட்டம் பெற்றார்.[2] இளமையில் இடதுசாரி அரசியல் கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். 1981 இல், நேபாளப் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார்.[3] பின்னர் 1989 இல் மாசல் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளரானார். இக்கட்சி பின்னர் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) எனப் பெயர் மாற்றம் பெற்றது.[4] நாட்டின் உளநாட்டுப் போரின் போது இக்கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவராகவும் இருந்தார். இவரது தலைமையின் கீழ் மாவோயிசவாதிகள் 1996 பெப்ரவரி 13 இல் அன்றைய மன்னராட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியை ஆரம்பித்தனர். இதன்போது கிட்டத்தட்ட 13,000 நேபாளிகள் கொல்லப்பட்டனர்.[5] 2008 தேர்தலில், மாவோயிசக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியதை அடுத்து, பிரசந்தா 2008 ஆகத்து மாதத்தில் பிரதமரானார்.[6] எட்டு இராணுவத் துணைத் தளபதிகளை நீக்க மாவோயிச அரசு எடுத்த முடிவை இராணுவத் தளபதி ரூக்மங்கத் கத்தவால் மதிக்காமல் அவர்களைப் பணி நீடிப்பு செய்தார், அதனால் ஏற்பட்ட மோதலில் இராணுவத் தளபதியை பிரதமர் பிரசந்தா நீக்கினார். ஆனாலும், குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் ரூக்மங்கத் கத்தவாலை பதவியில் தொடருமாறு கூறியதை அடுத்து பிரசந்தா பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.[7]

காங்கிரசு மற்றும் மாவோயிசப் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றின் சுழற்சி முறை அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தின்படி,[8] பிரசந்தா 2016 இல் இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவியேற்றார்.[9] 2017 மே 24 இல் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[10][11] 2022 பொதுத்தேர்தலில், நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ), இராசுத்திரிய சுயதந்திரக் கட்சி, இராசுத்திரீய பிரசாதந்திரக் கட்சி ஆகியவற்றுடனான கூட்டணியில் பிரசந்தா மீண்டும் 2022 திசம்பரில் மூன்றாவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்றார்.[12]

மேற்கோள்கள் தொகு

 1. "Prachanda elected Prime Minister of Nepal". The Hindu. 16 August 2008. http://www.thehindu.com/todays-paper/Prachanda-elected-Prime-Minister-of-Nepal/article15282412.ece. 
 2. Somini Sengupta, and he was also a high school teacher in Aarught of Gorkha district."Where Maoists Still Matter", த நியூயார்க் டைம்ஸ், 30 October 2005.
 3. [1] பரணிடப்பட்டது 3 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
 4. Mahendra Lawoti and Anup K. Pahadi, தொகுப்பாசிரியர் (2010). The Maoist Insurgency in Nepal: Revolution in the twenty-first century. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-77717-9. 
 5. "Maoist Leader Becomes Nepalese PM," பிபிசி, ஆகத்து 15, 2008
 6. "Ex-rebels' chief chosen as Nepal's new PM", Associated Press (International Herald Tribune), August 15, 2008.
 7. http://www.indianexpress.com/news/nepal-pm-prachanda-resigns-political-crisis-deepens/454275/
 8. "Maoist chief Prachanda elected as Nepal prime minister". The Times of India. Reuters. 3 August 2016. http://timesofindia.indiatimes.com/world/south-asia/Maoist-chief-Prachanda-elected-as-Nepal-prime-minister/articleshow/53523388.cms. 
 9. Chaudhury, Dipanjan Roy (4 August 2016). "New PM Prachanda will bring Indo-Nepal ties back on track, hopes India". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/new-pm-prachanda-will-bring-indo-nepal-ties-back-on-track-hopes-india/articleshow/53544117.cms. 
 10. "Nepalese PM announces resignation – Xinhua | English.news.cn" இம் மூலத்தில் இருந்து 24 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170524134613/http://news.xinhuanet.com/english/2017-05/24/c_136311901.htm. 
 11. "Prachanda resigns as Nepal Prime Minister making way for Sher Bahadur Deuba to take over". http://www.timesnow.tv/international/article/prachanda-resigns-as-nepal-prime-minister-making-way-for-sher-bahadur-deuba-to-take-over/61620. 
 12. Online, T. H. T. (25 December 2022). "President Bhandari appoints Dahal as new PM, swearing-in on Monday" (in en). https://thehimalayantimes.com/kathmandu/president-bhandari-appoints-dahal-as-new-pm-swearing-in-on-monday. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிரசந்தா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசந்தா&oldid=3633386" இருந்து மீள்விக்கப்பட்டது