பிரசுன் பானர்ஜி (பாடகர்)

பண்டிட் பிரசுன் பானர்ஜி ( Pandit Prasun Banerjee ) (15 ஆகத்து 1926- 22 மார்ச் 1997 ) இவர் பாட்டியாலா கரானாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகராவார்.

பிரசுன் பானர்ஜி
பிறப்பு15 ஆகத்து 1926
கடம் கௌன், பட்னா,பிரித்தானிய இந்தியா
இறப்பு22 மார்ச் 1997
கொல்கத்தா, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடுதல்
இசைத்துறையில்? – 1994

இவர் தனது இருபது வயதில் கல்லூரியை விட்டு வெளியேறி, முதலில் ஜாமினி கங்குலியிடமிருந்தும், பின்னர் ஞான பிரகாஷ் கோஷிடமிருந்தும் இசை பயிற்சி மேற்கொண்டார். இவர், அகில இந்திய வானொலியில் 'ஏ' தர கலைஞராக இருந்தார். 1957 ஆம் ஆண்டில் இவர் மீரா என்பவரை மணந்தார். பின்னர் இவர்கள் இருவரும் படே குலாம் அலிகானின் சீடர்களாக மாறினர் . கொல்கத்தா இசைப்பள்ளியில் இந்துஸ்தானை இசையை கற்பித்த இவர் ஐடிசி விருது (1994) மற்றும் புவல்கா விருது (1995) ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசுன்_பானர்ஜி_(பாடகர்)&oldid=3050130" இலிருந்து மீள்விக்கப்பட்டது