பிரதிஜ்னா தேவி
பிரதிஜ்னா தேவி என்பவர் ஒடியா மொழி எழுத்தாளர் ஆவார்.[1]
பிறப்பு மற்றும் குடும்பம்
தொகுஒடிசாவில் உள்ள ஜெகதிஷ்சிங்பூர் மாவட்டத்தின் பெரிய கிராமமான குஜங்கில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார்.இவரது தந்தையின் பெயர் ராஜா நாராயணன் வீரபத்ர சமந்தா மற்றும் தாயாரின் பெயர் ராணி ரத்னமாலா ஜெமா.இவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர் ஆவார். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற பின் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக இவரது தந்தை தேர்வு செய்யப்பட்டார்.
கல்வி மற்றும் வாழ்க்கை
தொகுகட்டாக்கில் உள்ள ராவென்ஷா கல்லூரியில் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.புகழ்பெற்ற ஓடிய மொழி மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளர் பத்மஸ்ரீ மனோஜ் தாஸ் இவரது கணவர் ஆவார்.[2] இவரது கணவர் மற்றும் உறவினர்களுடன் 1963 பிப்ரவரி மாதம் முதன் முறையாக புதுச்சேரியின் அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றார் பின்னர் அங்கேயே தங்கி வாழத்தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள அரவிந்தோ ஆசிரம மருத்துவமணையில் காலாமானார்.[3]
எழுத்துப்பணி
தொகுபிரதிஜ்னா தேவி பல சிறுகதைகளை எழுதியுள்ளார். ஒடிய மொழி குழந்தைகள் இதழான ஜானா மாமுவில் (Jahna mamu) இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன