பிரதிமா தேவி (கன்னட நடிகை)

கன்னட நடிகை

பிரதிமா தேவி (Prathima Devi) (9 ஏப்ரல் 1933 - 6 ஏப்ரல் 2021) கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார். 1947 ஆம் ஆண்டு கிருஷ்ணலீலா திரைப்படத்தின் மூலம் பிரதிமா தேவி அறிமுகமானார். பாக்ஸ் ஆபிஸில் 100 நாட்களை நிறைவு செய்த முதல் கன்னடத் திரைப்படமான ஜெகன்மோகினி (1951) திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]

பிரதிமா தேவி
பிறப்புமோகினி
(1933-04-09)9 ஏப்ரல் 1933
கல்லாட்கா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது கருநாடகம், இந்தியா)
இறப்பு6 ஏப்ரல் 2021(2021-04-06) (அகவை 87)
மைசூர்,
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1947–2005
வாழ்க்கைத்
துணை
சங்கர் சிங்
பிள்ளைகள்4

சுயசரிதை

தொகு

தேவி 9 ஏப்ரல் 1933 அன்று மெட்ராஸ் பிரசிடென்சியின் (தற்போதைய கர்நாடகாவில் ) தென் கனரா பகுதியில் உள்ள கல்லாட்கா என்ற ஊரில் உபேந்திர ஷெனாய் மற்றும் சரஸ்வதிபாய் ஆகியோரின் நான்கு குழந்தைகளில் கடைசியாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் மோகினி ஆகும். தேவி நான்கு அல்லது ஐந்து வயதாக இருக்கும் போது தந்தையை இழந்தார்; குடும்பம் மங்களூருக்கு குடிபெயர்ந்தது, பின்னர் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தது, அங்கு அவரது மைத்துனர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார், உடுப்பியில் குடியேறினார். 1941 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான சாவித்திரியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடித்ததன் மூலம், தேவிக்கு திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.

கிருஷ்ணலீலா (1947) திரைப்படத்தில் நுழைவதற்கு முன்பு தேவி 11 வயதில் தொழில்முறை நாடகத்தில் சேர்ந்தார்.[2] படத்தில், இவர் கெம்பராஜ் அர்ஸுடன் திரையைப் பகிர்ந்து கொண்டார், அதே நேரத்தில் வருங்கால கணவர் டி. ஷங்கர் சிங்கை அதன் செட்டில் சந்தித்தார். இவர் ஜெகன்மோகினியில் (1951) தோன்றினார், இது திரையரங்குகளில் 100 நாள் ஓடி முடித்த முதல் கன்னடத் திரைப்படமாகும். மேக்கப் சுப்பண்ணாவுடன் இவர் நடித்த டல்லாலி (1952) மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றது. மஹாத்மா பிலிம்ஸ் பேனரின் கீழ் இவரது கணவர் தயாரித்த படங்களில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் அடங்கும்.[3]

தேவிக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர்: மகன் ராஜேந்திர சிங் பாபு ஒரு திரைப்பட இயக்குனர், சங்ராம் சிங் மற்றும் ஜெய்ராஜ் சிங் மற்றும் மகள் விஜயலட்சுமி சிங், நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[4] தேவி ஏப்ரல் 6, 2021 அன்று மைசூர் சரஸ்வதிபுராவில் உள்ள தனது இல்லத்தில் 88 வயதில் காலமானார்

விருதுகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "An evening with Jaganmohini". தி இந்து. 11 June 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/an-evening-with-jaganmohini/article2095027.ece. பார்த்த நாள்: 14 September 2015. 
  2. "Prathima Devi, veteran actor, passes away" (in en-IN). The Hindu. 7 April 2021. https://www.thehindu.com/news/national/karnataka/prathima-devi-veteran-actor-passes-away/article34258301.ece. 
  3. "Remembering Prathima Devi". The Hindu. 8 April 2021.
  4. George, Nina C. (21 August 2016). "When mom's the world". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 April 2021.