பிரபாதேவி கோயில்

இந்தியாவின் மும்பையில் உள்ள ஓர் இந்து கோயில்

பிரபாதேவி கோயில் (Prabhadevi Temple) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் இந்து கோயிலாகும். மும்பை தாதருக்கு அருகில் உள்ள பிரபாதேவி பகுதியில் இது அமைந்துள்ளது. பிரபாவதிதேவி கோயில் என்ற பெயராலும் கோயில் அழைக்கப்பட்டுகிறது. கோயிலில் உள்ள பிரதான தெய்வமான பிரபாவதி தேவியின் சிலை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயில் 1715 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக திகழ்கிறது. [1][2][3]

பிரபாவதி கோயில்
Prabhadevi Temple
Prabhadevi Temple in Prabhadevi..JPG
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பிரபாவதி, மும்பை, இந்தியா
சமயம்இந்து சமயம்
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை
கட்டிடக்கலை தகவல்கள்
Funded byபதரே பிரபு சமுதாயம்
அளவுகள்

வரலாறுதொகு

பிரபாதேவி கோயிலின் முக்கிய தெய்வம் முதலில் சாகம்பரி தேவியாக இருந்த்தாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். தேவகிரியின் சேனா யாதவ அரசன் பிம்ப ராசாவின் புகழ்பெற்ற குலதெய்வம் சாகம்பரி தேவியாகும். [4] உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின்படி, மும்பையின் ஆரம்பகால பூர்வீக சமூகங்களில் ஒன்றான பத்தரே பிரபு சமுதாயத்தைச் சேர்ந்த சியாம் நாயக் என்ற பக்தரின் கனவில் பிரபாவதி தேவி தோன்றினார் என்றும் இவரே பிரபாவதி கோயிலைக் கட்டினார் என்றும் அறியப்படுகிறது. [4][3]

அம்மன் சிலை பின்னர் கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. அங்கு அது முகலாயர்கள் என்று அழைக்கப்படும் முசுலீம் படையெடுப்பாளர்களால் தாக்கப்பட்டது. பின்னர், அச்சிலை மீண்டும் மாகிம் கிரீக்கிற்கு மாற்றப்பட்டு தற்போதைய பிரபாதேவி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. [5]

அருகாமை பகுதிகள்தொகு

  • வடக்கே தாதர், தெற்கே வோர்லி மற்றும் மேற்கில் அரபிக் கடல் ஆகியவற்றுக்கு இடையே பிரபாதேவி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. பிரபாதேவி கோயில் தெய்வத்தின் நினைவாக இந்த இடத்திற்கு பிரபாவதி தேவி எனப் பெயரிடப்பட்டது. [3]
  • மும்பை புறநகர் இரயில்வேயின் மேற்குப் பாதையில் உள்ள பிரபாதேவி ரயில் நிலையமும், பிரபாதேவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. [1] முன்னதாக இது எல்பின்சுடோன் சாலை என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

காட்சியகம்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாதேவி_கோயில்&oldid=3369147" இருந்து மீள்விக்கப்பட்டது