பிரபா ஸ்ரீதேவன்

பிரபா ஸ்ரீதேவன் இந்திய உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (IPAB) முன்னாள் தலைவர் (மே 2011 - ஆகஸ்டு 2013).[1]

இவர் தேசபக்தரும், மெரீனாவிற்காகப் போராடியவருமான வி.கிருஷ்ணஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி ஆவார்.[2] ஒரு வழக்கில் இல்லத்தரசிகளின் பணிகள் குறைத்து மதிப்பிடப்படக் கூடிய ஒன்று அல்ல என்றும், அதற்கு பொருளாதார மதிப்பீடும் தந்து இவர் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் மதிப்பை உணர்த்தியது.[3]

அறிவுசார் சொத்துரிமைத் துறையில் (IP), அவற்றினை நிர்வகிப்பதில் மிகுந்த திறமைசாலியாகவும், அத்துறையில் உலக அளவில் முன்னோடியான முதல் 50 நபர்களில் ஒருவராகவும் மதிப்பிடப்படுகிறார்.[4]

இவர் தமிழகத்தின் நாளிதழான தினமணியில் இடையிடையே கட்டுரைகள் எழுதி வருகிறார்.

இளைஞர்களுக்கு இவரது உரை தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபா_ஸ்ரீதேவன்&oldid=3563485" இருந்து மீள்விக்கப்பட்டது