பிரம்மன்பரியா மாவட்டம்

பிரம்மன்பரியா மாவட்டம் (Brahmanbaria District) (வங்காள மொழி: ব্রাহ্মণবাড়িয়া) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிட்டகாங் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் கிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பிரம்மன்பரியா நகரம் ஆகும்.

வங்காளதேசத்தில் பிரம்மன்பரியா மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள் தொகு

1927.11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிரம்மன்பரியா மாவட்டத்தின் வடக்கில் கிசோர்கஞ்ச் மாவட்டம் மற்றும் ஹபிகஞ்ச் மாவட்டம், தெற்கில் கொமில்லா மாவட்டம், கிழக்கில் இந்தியாவின் திரிபுரா மாநிலம், மேற்கில் மெக்னா ஆறு, நர்சிங்தி மாவட்டம் மற்றும் நாராயணன் கஞ்ச் மாவட்டத்தின் சில பகுதிகள் எல்லைகளாகக் கொண்டது.

மாவட்ட நிர்வாகம் தொகு

1881.20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிரம்மன்பரியா மாவட்டம், பிரம்மன்பரியா சதர், அகௌரா, கோஸ்பா, பங்காராம்பூர், சரைல், நபிநகர், நசிர்நகர், அசுகோன்ச் மற்றும் விஜய்நகர் என ஒன்பது துணை மாவட்டங்களையும், பிரம்மன்பரியா, அசுகோன்ஞ், நபிநகர், கஸ்பா எனும் நான்கு நகராட்சி மன்றங்களையும், நூறு ஒன்றியங்களையும், 1323 கிராமங்களையும், ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. பிரம்மன்பரியா மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 3500 ஆகும். இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 78.06 செண்டி மீட்டராகும். [1]

வேளாண்மை தொகு

இம்மாவட்டத்தில் மெக்னா, தீடாஸ், சால்டா, ஹௌரா, சோனை, பக்ளா, புத்தியா, ரோபா, பூரி, போலாக், டோல்பங்கா முதலிய ஆறுகள் பாய்வதால் வேளாண்மை வளமிக்கதாக உள்ளது. நெல், சணல், ஆமணக்கு, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, பருப்பு வகைகள், அன்னாசி போன்றவைகள் விளைகிறது.

கல்வி தொகு

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [தரம் 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைக் கல்வியும், [தரம் 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [தரம் 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

பிரம்மன்பரியா மாவட்டத்தில் ஆறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், ஒரு பொறியல் மற்றும் மருத்துவக் கல்லூரியும் உள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

1881.20 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 28,40,498 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 13,66,711 ஆகவும், பெண்கள் 14,73,787 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 93 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1510 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 45.3 % ஆக உள்ளது.[2][3]இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையாக வங்காள மொழி பேசுகின்றனர்.

தொடருந்து நிலையம் தொகு

பிரம்மன்பரியா மாவட்டத்தின் அக்கௌரா நகரத்தின் தொடருந்து நிலையம், நாட்டின் டாக்கா மற்றும் சிட்டகாங் போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. [4]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு