பிராங்கோ மூலக்கல்
பிராங்கோ மூலக்கல் (Franco Mulakkal)[1][2][3][4][5][6] இவர் 2013-ஆம் ஆண்டு முதல் ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆக பணியாற்றியவர்.[7][8][9] இந்தியக் கத்தோலிக்க வரலாற்றில் முதன்முதலில் ஒரு கன்னியாஸ்திரியை கற்பழிப்பு செய்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் கிறித்துவ ஆயர் ஆவார்.[10]
பிராங்கோ மூலக்கல் | |
---|---|
ஆயர், உரோமன் கத்தோலிக்க திருச்சபை | |
உயர் மறைமாவட்டம் | உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தில்லி பேராயர் |
மறைமாவட்டம் | ஜலந்தர் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் |
நியமனம் | 13 சூன் 2013 |
ஆட்சி துவக்கம் | 13 சூன் 2013 |
முன்னிருந்தவர் | அனில் ஜோசப் தாமஸ் கௌட்டோ |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 21 ஏப்ரல் 1990 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 21 பிப்ரவரி 2009 வின்சென்ட் மைக்கேல்-ஆல் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பிராங்கோ மூலக்கல் |
பிறப்பு | 25 மார்ச்சு 1964 மட்டாம், திருச்சூர், கேரளா, இந்தியா |
குடியுரிமை | இந்தியன் |
சமயம் | சைரோ-மலபார் கத்தோலிக்கத் திருச்சபை |
தொழில் | பிஷப் |
படித்த இடம் | குருநானக் பல்கலைக்கழகம் அல்போன்சியன் அகாதமி |
வரலாறு
தொகுஇவர் 21 ஏப்ரல் 1990-இல் கேரளாவின் திருச்சூர் மாவட்டம், மட்டோம் எனுமிடத்தில் உள்ள சைரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையில் பாதிரியாராகச் சேர்ந்தார்.[11]
பின்னர் இவர் 17 சனவரி 2000-இல் தில்லியின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 21 பிப்ரவரி 2009-இல் பிஷப் (ஆயர்) நிலைக்கு உயர்த்தப்பட்டார். 11 சூன் 2013-இல் ஜலந்தர் திருச்சபையின் ஆயராக நியமிக்கப்பட்டார்.[12][13]
கற்பழிப்பு வழக்கு, கைது, நீதிமன்ற விசாரனை
தொகுசூன் 2018-இல் கேரளா மாநில கன்னியாஸ்திரீ ஒருவர், பிஷப் பிராங்கோ மூலக்கல், 2014 - 2016 இடைப்பட்ட ஆண்டுகளில் கோட்டயம் கன்னியாஸ்திரீ மடத்திற்கு வருகை தந்த போது, தன்னை 13 முறை கற்பழித்தாக காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.[14][15][16][17][18][19][20]
மேலும் மூன்று கன்னியாஸ்திரிகள், பிராங்கோ மூலக்கல் தங்களிடமும் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறினார்கள். இப்புகாரை கன்னியாஸ்திரிகளின் தலைமை கன்னியாஸ்திரியான மதர் சுப்பீரியர் மறுத்ததுடன், பிஷப் பிராங்கோ மூலக்கல் குற்றமற்ற அப்பாவி எனக்கூறி கன்னியாஸ்தீரிகளின் புகாரை மறுத்தார்.[21] இதன் பின்னர் 20 செப்டம்பர் 2018 அன்று பிராங்கோ மூலக்கல் தான் பிஷப் பதவியிலிருந்து விடுமுறையில் செல்வதாக போப்பாண்டருக்கு விண்ணப்பித்தார். இதனை போப்பும் ஏற்றுக் கொண்டார்.[22]
செப்டம் 2018-இல் கன்னியாஸ்திரியை கற்பழித்த வழக்கில் பிசப் பிராங்கோ மூலக்கல்லின் தொடர்புக்கு முதல்நிலை ஆதாரம் இருப்பதாக கருதிய கேரளா மாநில காவல் துறையினர் பிஷப் பிராங்கோ மூலக்கலை கொச்சியில் கைது செய்தனர்.[23][24][25][26]
நீதிமன்றத்தில் ஒப்புவிக்கப்பட்ட பிஷப் பிராங்கோ மூலக்கல்லை, 20 அக்டோபர் 2018 வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் பிசப் பிராங்கோ மூலக்கல் முறையிட்டார்.[27] ஏப்ரல் 2019-இல் பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது, கன்னியாஸ்திரியை 9 முறை கற்பழித்தாக குற்றம் சாட்டப்பட்டார்.[28] ஒரு கர்தினால், மூன்று பிஷப்புகள், 11 பாதிரியார்கள், 25 கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 80 சாட்சிகளின் குழுவினர் கேரளாவில் கிறித்துவ அருட்சகோதரிகளை காக்க, பிஷப் பிராங்கோ மூலகல்லுக்கு எதிராக அறிக்க விட்டனர்.[28]
பிராங்கோ மூலக்கல் தன்னை கற்பழிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஆகத்து 2020-இல் கேரளா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை கேரளா உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே மூலக்கல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 2020-இல் முறையிட்டார். அங்கும் இவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.[29] எனவே பிராங்கோ மூலக்கல் மீதான கற்பழிப்பு வழக்கு செப்டம்பர் 2020 முதல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது.[30]
நீதிமன்றத் தீர்ப்பும், மீண்டும் இறைப்பணிக்கு திரும்புதலும்
தொகு14 சனவரி 2022 அன்று கேரளா நீதிமன்றம், கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், பிராங்கோ குற்றமற்றவர் என தீர்ப்பளித்து விடுதலை செய்தது.[31]எனவே 12 சூன் 2022 அன்று பிராங்கோ மூலக்கல் மீண்டும் இறைப்பணிக்கு திரும்பினார்.[32]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Birthday wishes to Bp. Franco Mulakkal | Missionaries of Jesus". missionariesofjesus.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
- ↑ "Dr Cheema Felicitates Bishop Franco Mulakkal For Completing 25 Years Of Baptism | City Air News". cityairnews.com. Archived from the original on 2017-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
- ↑ "Sukhbir meets Bishop of Diocese in Jalandhar - Indian Express". archive.indianexpress.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
- ↑ "Rt. Rev. Dr. Franco Mulakkal | Navjeevan Charitable Society". navjeevanjalandhar.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-07-03. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
- ↑ Administrator. "Fr. Franklin and Team greeted Bishop Franco Mulakkal - Indian Catholic Youth Movement (ICYM)". icym.net (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2017-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
- ↑ "Home - Diocese of Jalandhar" (in en-US). Diocese of Jalandhar. 2013-11-16 இம் மூலத்தில் இருந்து 2017-06-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170611142824/http://jalandhardiocese.com/.
- ↑ "Bp. Franco visits Salesian College" (in en-US). Salesian College Dimapur. 2017-07-14. http://scdimapur.org/latest-news/bp-franco-visits-salesian-college/.
- ↑ "Newly appointed DIOCESE of Jalandhar, Bishop Franco Mulakkal". calgaryindians.com. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
- ↑ "Franco Mulakkal is new bishop" (in en). hindustantimes.com/. 2013-06-14. http://www.hindustantimes.com/punjab/franco-mulakkal-is-new-bishop/story-EXoOODLscIKWOD6eKkMDlM.html.
- ↑ . https://www.globalsistersreport.org/news/accountability/news/news/mulakkal-appears-trial-nuns-rape-next-hearing-set-jan-6.
- ↑ Franco, Mulakkal. "Bishop Franco Mulakkal biography" (PDF). files.mulakkal.com. Archived from the original (PDF) on 23 September 2018. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
- ↑ "Bishop Franco Mulakkal | Bishop of Jalandhar Diocese Franco Mulakkal | Ucanews". directory.ucanews.com. Archived from the original on 25 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-06-19.
- ↑ Cheney, David M. "Bishop Franco Mulakkal (Aippunny) [Catholic-Hierarchy]". catholic-hierarchy.org. பார்க்கப்பட்ட நாள் 2017-06-19.
- ↑ New indian express rape news (2018-07-07), Rt. Rev. Dr. Franco Mulakkal, Bishop of Catholic Diocese of Jalandhar, Punjab, India, பார்க்கப்பட்ட நாள் 2018-07-07
- ↑ "Kerala rape case: Pope temporarily relieves Bishop Mulakkal of pastoral duties - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/kerala-rape-case-pope-temporarily-relieves-bishop-mulakkal-of-pastoral-duties/articleshow/65887778.cms.
- ↑ "Bishop Franco Mulakkal, Accused Of Raping Kerala Nun, Temporarily Removed By Vatican". NDTV.com. https://www.ndtv.com/india-news/bishop-franco-mulakkal-accused-of-kerala-nuns-rape-relieved-of-duties-by-vatican-1919558.
- ↑ "Nun 'rape' case: SIT to question bishop for 3rd day tomorrow - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/nun-rape-case-sit-to-quiz-priest-for-3rd-day-tomorrow/articleshow/65890865.cms.
- ↑ "Kerala nun rape case: Accused Bishop Franco Mulakkal quizzed for 8 hours on Day 2 - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kochi/kerala-nun-rape-case-accused-bishop-franco-mulakkal-quizzed-for-8-hours-on-day-2/articleshow/65891738.cms.
- ↑ "Kerala Nun Rape Case: Bishop Franco Mulakkal to appear before Kerala Police for interrogation - Republic World" (in en-US). Republic World. https://www.republicworld.com/india-news/general-news/kerala-nun-rape-case-bishop-franco-mulakkal-to-appear-before-kerala-police-for-interrogation.
- ↑ "Kerala nun rape case: Bishop Franco Mulakkal appears before probe team". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-20.
- ↑ "Indian bishop accused of rape steps aside, requests leave from Vatican" (in en). Catholic News Agency. https://www.catholicnewsagency.com/news/indian-bishop-accused-of-rape-steps-aside-requests-leave-from-vatican-71892.
- ↑ https://www.ncronline.org/news/accountability/pope-names-administrator-indian-bishop-investigated-alleged-rape
- ↑ "India bishop accused of rape arrested". 21 September 2018 – via www.bbc.co.uk.
- ↑ "Kerala Police arrested Franco". Asianet News. பார்க்கப்பட்ட நாள் 2018-09-21.
- ↑ "Bishop Franco Mulakkal arrested in Kerala nun rape case" (in en). indiatoday. https://www.indiatoday.in/india/story/bishop-franco-mulakkal-arrested-in-kerala-nun-rape-case-1345584-2018-09-21.
- ↑ "Catholic bishop in India arrested after being accused of raping nun" (in en). CNN. https://www.cnn.com/2018/09/21/asia/india-bishop-sex-abuse-intl/index.html.
- ↑ "Kerala nun rape case: Bishop Franco Mulakkal's judicial custody extended by 14 days" (in en). indianexpress.com. https://indianexpress.com/article/india/kerala-nun-rape-case-bishop-franco-mulakkals-judicial-custody-extended-by-14-days-5389570/.
- ↑ 28.0 28.1 https://www.catholicnewsagency.com/news/indian-bishop-formally-charged-with-rape-39446
- ↑ Kerala nun rape case: Supreme Court dismisses discharge plea of accused Bishop Franco Mulakkal
- ↑ Kerala nun rape case: Ex-bishop Franco Mulakkal in court as trial begins
- ↑ பிராங்கோ முலக்கல்: கன்னியாஸ்திரி மீதான பாலியல் வல்லுறவு வழக்கில் பிஷப் விடுதலை
- ↑ Bishop Franco Mulakkal, accused of raping Kerala nun, to resume pastoral duties