பிரான்சின் மூன்றாம் நெப்போலியன்

மூன்றாம் நெப்போலியன் (Napoléon III)), அல்லது லூயி நெப்போலியன் பொனபார்ட் (Louis-Napoléon Bonaparte, ஏப்ரல் 20, 1808 - ஜனவரி 9, 1873) என்பவன் பிரெஞ்சுக் குடியரசின் முதலாவது தலைவனாகவும், இரண்டாவது பிரெஞ்சுப் பேரரசின் ஒரேயொரு பேரரசனாகவும் இருந்தவன்.

மூன்றாம் நெப்போலியன்
Napoléon III
பிரான்சின் பேரரசன்
Franz Xaver Winterhalter Napoleon III.jpg
ஆட்சிடிசம்பர் 2, 1852 - செப்டம்பர் 4, 1870
முன்னிருந்தவர்இரண்டாவது குடியரசின் தலைவன் (தன்னைத்தானே அறிவிப்பு)
லூயி பொனபார்ட்
பின்வந்தவர்பேரரசு அகற்றப்பட்டது
தேசியப் பாதுகாப்புக்கான அரசின் தலைவன் லூயி ஜூல்ஸ் ட்ரோசு
De Jure, நான்காம் நெப்போலியன்
துணைவர்மரீயா யூஜினியா
வாரிசு(கள்)இளவரசன் நெப்போலியன் யூஜின்
முழுப்பெயர்
சார்ல்ஸ் லூயி நெப்போலியன் பொனபார்ட்
மரபுபொனபார்ட்
தந்தைலூயி பொனபார்ட்
தாய்ஹோர்ட்டென்ஸ்
அடக்கம்பார்ன்பரோ, இங்கிலாந்து

வாழ்க்கைக் குறிப்புதொகு

மூன்றாம் நெப்போலியன், முதலாம் நெப்போலியன் என்ற நெப்போலியன் பொனபார்ட் பேரரசனின் சகோதரனான லூயி பொனபார்ட்டின் மகனாவான். முதலாம் நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் லூயி நெப்போலியனின் தந்தை பிரான்சின் ஒரு பகுதிக்கு அரசனாக்கப்பட்டான். 1815 இல் முதலாம் நெப்போலியனின் கடைசித் தோல்வியை அடுத்து நெப்போலியன் குடும்பம் முழுவது நாடு கடத்தப்பட்டனர். சிறுவனான லூயி நெப்போலியன் சுவிட்சர்லாந்தில் அவனது தாயாரால் வளர்க்கப்பட்டு பின்னர் ஜெர்மனி கல்விகற்க அனுப்பப்பட்டான். இளம் வயதில் இத்தாலிக்கு அவனது தமையன் நெப்போலியன் லூயியுடன் வசித்தான். அங்கு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வடக்கு இத்தாலியை ஆக்கிரமித்திருந்த ஆஸ்திரியாவை எதிர்த்த இயக்கத்தில் இணைந்து போராடினான்.

அக்டோபர் 1836 இல் பிரான்சுக்கு இரகசியமாகத் திரும்பி அரசுக்கெதிரான புரட்சிக்குத் தலைமை தாங்கினான். ஆனாலும் அவனது முயற்சி தோல்வியடையவே அவன் இரகசியமாக ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று அங்கு 4 ஆண்டுகள் நியூ யோர்க்கில் வசித்தான். பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 1840 இல் சில கூலிப் படைகளுடன் நாடு திரும்பினான். இம்முறை அவன் கைது செய்யப்பட்டு அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டான். 1846 இல் அவன் சிறையிலிருந்து தப்பி இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகருக்கு குடியேறினான். அங்கு கட்டிடத் தொழிலாளி போல வேடமணிந்து வாழ்ந்தான். ஒரு மாதத்தின் பின்னர் அவனது தந்தை இறக்கவே பிரான்சின் முடிக்கு நேரடி வாரிசானான்.

வெளி இணைப்புகள்தொகு