பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம்
பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் (பி.கீ.ஆ.க, பிரெஞ்சு மொழி: École française d'Extrême-Orient, EFEO) என்பது ஒரு பிரான்சிய நிறுவனம். இது ஆய்வுநோக்கில் ஆசியக் குமுகங்களைப் பற்றி அறிந்துகொள்ள 1900 ஆம் ஆண்டில் வியட்நாம் தலைநகர் ஆனோயில் தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. வியட்நாமின் விடுதலைக்குப் பின்பு, ஆய்வுக் கல்விக்கூடத்தின் தலைமையிடம் பாரிசுக்கு மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய ஆய்வு தளங்கள் தொல்லியல், பனுவலியல் (philology) , மற்றும் தற்கால ஆசிய சமுதாயங்கள் ஆகும். 1907 முதல் இந்நிறுவனம் ஆங்கோரில் உள்ள தொல்லியல் களத்தைக் காப்பதில் பொறுப்பு வகிக்கின்றது.
சில இயக்குநர்கள்
தொகு- 1956-1977 : ழான் ஃபில்லியொசா (Jean Filliozat)
- 1977-1989 : François Gros
சீன மொழிக்கான பி.கீ.ஆ.க (EFEO) உரோமன் எழுத்தாக்க முறை
தொகு19-ம் நூற்றாண்டில், மண்டரின் மொழிக்கு (சீன மொழிக்கு) தகுந்த ஓர் உரோமன் எழுத்தாக்க முறை ஒன்றை பி.கீ.ஆ.க உருவாக்கியது. இது வேடு-கைல்சு (Wade-Giles) முறையோடும் பின்யின் (Pinyin) எனப்படும் எழுத்து முறையோடும் சில ஒற்றுமைகள் கொண்டது. தற்காலத்தில் பின்யின் முறையே மேலோங்கியும் வழக்கிலும் உள்ளது.
இந்த மூன்று எழுத்துப்பெயர்ப்பு முறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்:
IPA | EFEO | WG | Pinyin |
---|---|---|---|
p | p | p | b |
pʰ | p' | p' | p |
t | t | t | d |
tʰ | t' | t' | t |
k | k | k | g |
kʰ | k' | k' | k |
ts | ts | ts | z |
tsʰ | ts' | ts' | c |
tʂ | tch | ch | zh |
tʂʰ | tch' | ch' | ch |
tɕ | k/ts | ch | j |
tɕʰ | k'/ts' | ch' | q |
ɕ | s/h | hs | x |
w | ou/w | w | w |
j | i/y | y | y |
ɤ | ö/é | o/ê | e |
ɚ | eul | êrh | er |
z̩ | eu | û | i |
ʐ | e | ih | i |
y | u | ü | ü/u |
u | ou | u | u |
ən | en | ên | en |
ɤŋ | eng | êng | eng |
iɛ | ie | ieh | ie |
iɤʊ | ieou/iou | iu | iu |
iɛn | ien | ien | ian |
uo | ouo | o/uo | o/uo |
uaɪ | ouai | uai | uai |
ueɪ | ouei | ui | ui |
uan | ouan | uan | uan |
uən | ouen | un | un |
yœ | iue | üeh | üe/ue |
yɛn | iuen | üan | üan/uan |
yn | iun | ün | ün/un |
iʊŋ | ioung | iung | iong |
ஆய்வுக் கல்விக்கூடத்தின் நடுவங்கள்
தொகு- Siège : Maison de l’Asie, பாரிசு
- புதுச்சேரி இந்தியாவில்
- இரங்கூன் மியான்மாரில்
- சியாங்க் மாய் (Chiang Mai) தாய்லாந்தில்
- கோலாலம்பூர் மலேசியாவில்
- சகார்த்தா இந்தோநேசியாவில்
- நாம் பென்உம் சியேம் இரீப்பும் in கம்போடியாவில்
- வியண்ட்டியேன் இலாவோசில்
- ஆனோய் வியட்நாமில்
- ஆங்க்கொங்
- பெய்ச்சிங் சீனாவில்
- தைப்பெய் தைவானில்)
- சியோல் தென்கொரியாவில்
- கியோட்டோவும் தோக்கியோவும் சப்பானில்
வெளி இணைப்புகள்
தொகு- கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் (பி.கீ.ஆ.க), Ecole française d'Extrême-Orient
- (EFEO, புதுச்சேரி)
- Writing in western European languages that deal with China பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்