பிரான்சு ஜெர்மனி உறவு

பிரான்சு-ஜெர்மனி உறவு

சமரசம் 50 வது ஆண்டு நிறைவு, 8 ஜுலை 2012: அங்கெலா மேர்க்கெல் (இடது) ஜெர்மனி பிரான்சுவா ஆலந்து (வலது),பிரான்சு

பிரான்சு-ஜெர்மனி உறவை மூன்று வகையாக பிரிக்கலாம்.

  • 'பரம்பரைப் பகை' (1945 வரை )
  • 'சமரசம்', (1945-63வரை)
  • 'சிறப்பு உறவு' (1963 முதல்)

பகைமைதொகு

19ம் நூற்றாண்டுதொகு

பிரஷ்யா, ஜெர்மனி மொழி பேசும் ஒரு ராஜ்ஜியம் ஆகும். பிரான்சு-பிரஷ்யா போர் 1870ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்போரில் பிரான்சு தோல்வி அடைந்தது. இப்போரின் முடிவில் சிதறிக் கிடந்த ஜெர்மனி , ஒரு குடையின் கீழ் அகண்ட ஜெர்மனியாக ஒன்றிணைந்தது. மேலும் அல்சேஸ் மற்றும் லோரெய்ன் கால் ஆகியவை ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டது. பிரான்சு ஐந்து பில்லியன் பிராங்குகளை இப்போரின் நஷ்ட ஈடாக ஜெர்மனிக்கு செலுத்தியது.

இரண்டாம் உலகப் போர்தொகு

 
பாரிஸ் 1940 ஜெர்மனி இராணுவ வீரர்கள்

நாஜி ஜெர்மனி செப்டம்பர் 1939இல் போலந்து மீது படையெடுத்து. இதன் காரணமாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் கூட்டாக ஜெர்மனி மீது போர்ப் பிரகடனம் செய்தது. ஜெர்மனியின் மேற்கு முனையில் ஜெர்மன் ரீச் எதிராக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் கூட்டாக சுமார் 8 மாதம் 1 வாரம் [செப்டம்பர் 1939 – எப்ரல் 1940வரை] போர் தொடுத்தது[1]. 1940 ம் ஆண்டு மே 10 ம் தேதி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போருக்குப் பின் ஜெர்மன் படைகள் அங்கு போர் முடிவில் பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்கைக் கைப்பற்றியது.

போரின் முடிவில் நாஜி ஜெர்மனி 1940ஆம் ஆண்டு பிரான்ஸ் மீது போர் தொடுத்தது. பிரஞ்சு இராணுவம் சில வாரங்களுக்குள் தகர்த்தெறியப்பட்டது. பெரும்பாலான பிரான்ஸ், நாஜி ஜெர்மனியின் கீழ் வந்தது.

நட்புதொகு

 
சார்லஸ் டு கோல் மற்றும் கொன்ராட் அடினோவருடைய சிற்பம்.

ஜனவரி 22 , 1963 இல் சார்லஸ் டு கோல் மற்றும் கொன்ராட் அடினோவருடைய மேற்கு ஜெர்மனி எலிசே உடன்படிக்கை கையொப்பமானது. எலிசே உடன்படிக்கையில் பொருளாதார மற்றும் இராணுவ ஒருங்கிணைப்புக்காக உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேற்கோள்கள்தொகு