பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு

பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு (பிரெஞ்சு: La France et Les Francais - Mini encylopedie) என்பது சதாசிவம் சச்சிதானாந்தம் என்பவரால் எழுதப்பட்டு 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஓரு தமிழ் நூல் ஆகும். இது பிரான்சு நாடு, மொழி, மக்கள், வரலாறு, அரசியல், பண்பாட்டியல், வாழ்வியல், சமூகவியல் எனப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து தரும் ஒரு சிறு கலைக்களஞ்சியம் ஆகும். இந்த நூல் விரிவான புள்ளிவிபரங்கள், விளக்கப்படங்கள், நிலப்படங்கள், ஒளிப்படங்கள், அட்டவணைகள், உசாத்துணைகளுடன் வெளிவந்துள்ளது. பிரான்சு நாட்டுக்கு குடிபெயரும் தமிழ் மக்கள் பயன்படுத்தக் கூடியவாறு வழிகாட்டிப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேரா. வி. கோமதிநாயகம் இந்த நூல் "ஒரு ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில் நுணுகி ஆய்ந்து எழுதப்பட்ட ஒரு நூலாகும்...இவ்வகை நூல்களில் ஒரு புதிய பரிமாணத்தைத் இம் முயற்சி தருகிறது" என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு
நூல் பெயர்:பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு
ஆசிரியர்(கள்):சதாசிவம் சச்சிதானாந்தம்
வகை:கட்டுரை
துறை:சிறு கலைக்களஞ்சியம்
காலம்:1997
இடம்:பிரான்சு (பதிப்பிக்கப்பட்டது சென்னை)
மொழி:தமிழ்
பக்கங்கள்:404
பதிப்பகர்:Gnana
ஆக்க அனுமதி:Gnana