பிராமணர் பாதுகாப்பு மன்றம்

பிராமணர் பாதுகாப்பு மன்றம் (Brahmin Chetna Parishad), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், இந்திய அரசின் முன்னாள் கேபினட் அமைச்சருமான ஜிதின் பிரசாதா என்பவர் இந்த மன்றத்தின் ஒருகிங்ணைப்பாளர் ஆவார். 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், பிராமணர்களின் வாக்கு வங்கியை இந்திய தேசிய காங்கிரசு கட்சியினர் கவரும் பொருட்டு சனவரி, 2017-இல் இந்த மன்றம் துவக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநில மக்கள்தொகையில் 12% பிராமணர்கள் உள்ளதாக கருதப்படுகிறது. இம்மன்றத்தின் நோக்கம் பிராமணர்களை பாதுகாக்கவும், ஒருங்கிணைக்கவும் ஆகும். [1]

குற்றச்சாட்டுகள்தொகு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும், சத்திரிய வகுப்பைச் சேர்ந்தருமான யோகி ஆதித்தியநாத்தின் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டதாகவும், பிராமணர்களை மாற்றாந்தாய் மக்களாக நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியது. [2][3]

முன்னதாக உத்தரப் பிரதேசத்தின் பல தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளில் சேர்ந்து களம் கண்ட விகாஸ் துபே என்ற பிராமண வகுப்பைச் சேர்ந்த கொள்ளைக்கூட்டத் தலைவன், 3 சூலை 2020 அன்று கான்பூர் அருகே, ஒரு காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்று தலைமறைவானார். 10 சூலை 2020 அன்று காலையில் உச்சினி மகாகாலேஸ்வர் கோயிலிலிருந்து வெளிவந்த விகாஸ் துபேயை உத்தரப் பிரதேச காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து, காவல் வாகத்தில் ஏற்றிக்கொண்டு, கான்பூர் கொண்டு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தின் போது, விகாஸ் துபே காவல்துறையினரை தாக்கி விட்டு, தப்பி ஓடிய போது காவல் துறையினர் விகாஸ் துபேயை சுட்டத்தில் விகாஸ் துபே இறந்தார். இதற்கு உத்தரப் பிரதேசத்தின் அனைத்து எதிர்கட்சிகளும், முதலமைச்சருக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்தன. [4] [5]

அண்மையில் அயோத்தியில் குழந்தை இராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதிலிருந்து, உத்தரப் பிரதேச பிராமண சமூகத்தின் வாக்கு வங்கியை மையமிட்டு அரசியல் அதிகரித்துள்ளது. பிராமண சமூக வாக்குகளைப் பெற, இராமருக்கு ஈடாக பரசுராமரை உத்தரப்பிரதேச எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர்.

2007-இல் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் பரசுராமர் ஜெயந்திக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கும் வந்தவுடன் நீக்கிவிட்டதாகவும், மீண்டும் பரசுராமர் ஜெயந்தியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி பிராமின் சேத்னா சமிதி எனும் அமைப்பின் தலைவரான ஜிதின் பிரசாத், முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.[6][7]

மேற்கோள்கள்தொகு

  1. Cong leader Jitin Prasada looks to unite all UP Brahmins with Brahman Chetna Parishad
  2. U.P. government has not given its due to the Brahmin community, says Jitin Prasada
  3. Congress’ Jitin Prasada launches Brahmin body, blames Yogi govt for ‘step-motherly treatment’
  4. Vikas Dubey encounter
  5. All in a day: Appearance, arrest, end of bloody saga
  6. Jitin Prasada to UP CM: Restore public holiday on Parshuram Jayanti to boost confidence of neglected Brahmins
  7. பிராமணர்கள் பாதுகாப்பிற்கு சட்டப்பேரவையில் குரல் கொடுக்க அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாத் கடிதம்

வெளி இணைப்புகள்தொகு