பிரிகி அரிசாண்டி

இந்தோனேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர்

பிரிகி அரிசாண்டி (Prigi Arisandi) இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலராவார். 1976 ஆம் ஆண்டு சனவரி மாதம் 24 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்தோனேசியாவிலுள்ள மிகப் பழ்மையான ஏர்லாங்கா பல்கலைக்கழகத்தில் அரிசாண்டி உயிரியலில் பட்டம் பெற்றார். மூன்று மில்லியன் மக்களுக்கு குடிநீர் வழங்கிவரும் சுரபயா நதி தொழில்துறையால் சந்திக்கும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1][2][3] 1980 ஆம் ஆண்டிலிருந்தே தொழிற்சாலைகள் சுரபயா ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகளை கலந்து மாசுபடுத்தி வருகின்றன.

பிரிகி அரிசாண்டி
Prigi Arisandi
பிறப்புசனவரி 24, 1976 (1976-01-24) (அகவை 48)
கிரெசிக்
தேசியம்இந்தோனேசியர்
கல்விஉயிரியலாளர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஏர்லாங்கா பல்கலைக்கழகம்
விருதுகள்

மேற்கோள்கள் தொகு

  1. "Prigi Arisandi: Aksi Nyata Pelestarian Lingkungan Hidup" (in Indonesian). Kompasiana. 21 April 2011 இம் மூலத்தில் இருந்து 30 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120630021957/http://sosok.kompasiana.com/2011/04/21/prigi-arisandi-aksi-nyata-pelestarian-lingkungan-hidup/. பார்த்த நாள்: 31 May 2012. 
  2. "2011 Goldman Environmental Prize Recipients". Goldman Environmental Prize. Archived from the original on 4 June 2012. பார்க்கப்பட்ட நாள் 30 May 2012.
  3. "2011 Recipient for Islands: Prigi Arisandi". Goldman Environmental Prize. Archived from the original on 12 November 2011. பார்க்கப்பட்ட நாள் 30 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிகி_அரிசாண்டி&oldid=3221252" இலிருந்து மீள்விக்கப்பட்டது