பிரியங்கா சதுர்வேதி

இந்திய அரசியல்வாதி

பிரியங்கா விக்ரம் சதுர்வேதி (Priyanka Vickram Chaturvedi) (பிறப்பு 19 நவம்பர் 1979) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் மகாராஷ்டிரா மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார். இதற்கு முன்பு, அவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும், தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.[1]

பிரியங்கா சதுர்வேதி
Priyanka Chaturvedi
2018 இல் பிரியங்கா சதுர்வேதி
மக்களவை உறுப்பினர் (ராஜ்ய சபா)
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2020
குடியரசுத் தலைவர்
  • ராம் நாத் கோவித்
  • திரௌபதி முர்மூ
முன்னையவர்ராஜ்குமார் தூத்
தொகுதிமகாராஷ்டிரா மக்களவைத் தொகுதி
துணைத் தலைவர் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 நவம்பர் 1979 (1979-11-19) (அகவை 45)
இந்தியா
அரசியல் கட்சிசிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) (2022 இல் இருந்து )
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் (2010–2019)
சிவசேனா (2019–2022)
துணைவர்
விக்ரம் சதுர்வேதி (தி. 1999)
வாழிடம்மும்பை
வேலைகட்டுரையாளர்,
அரசியல்வாதி

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

சதுர்வேதி 19 நவம்பர் 1979 இல் பிறந்தார், மும்பையில் வளர்ந்தார். இவரது குடும்பம் உத்தரப் பிரதேசத்தின் மதுராவைச் சார்ந்ததாகும்.[2]சூகூவில் உள்ள செயின்ட் சோசப் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.[3]1999 இல் வில்லே பார்லேயில் உள்ள நர்சி மோஞ்சி வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார்.[3]அவர் விக்ரம் சதுர்வேதியை 19 நவம்பர் 1999 இல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[4]

தொழில்

தொகு

ஊடகம், மக்கள் தொடர்புகள் மற்றும் நிகழ்வு மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான எம் பவர் அறிவுரைஞர்கள் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார் பிரியங்கா. மேலும் இவர் பிரயாஸ் அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார், இது 200க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு பள்ளிகளை இயக்குகிறது.

2010 இல், கோல்ட்மேன் சாக்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் (ISB) 10,000 பெண் தொழில்முனைவோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் திட்டம், உலகெங்கிலும் உள்ள பெண் தொழில்முனைவோரைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

பிரியங்கா ஓர் கட்டுரையாளர் ஆவார். இவர் தெகல்கா, டெய்லி நியூஸ், அனாலிசிஸ் மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்ட் போன்ற ஊடகங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். [5]

மேலும், இவர் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவராவார். இவர் ஒரு பிரபலமான புத்தக விமர்சன வலைப்பதிவை நடத்தி வருகிறார், இது இந்தியாவில் உள்ள புத்தகங்களில் முதல் பத்து வலைப்பதிவுகளில் ஒன்றாக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.[5]

குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களுக்கான அதிகாரம் ஆகியவற்றில் அதிக ஆர்வமுடையவர். இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறங்காவலராக உள்ளார்.

இந்திய அரசியல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், குழந்தைகள் உரிமைகள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் வரும்போது அவர் தொலைக்காட்சி விவாதங்களில் தவறாமல் இருப்பவர்.[6]

அரசியல் வாழ்க்கை

தொகு

இந்திய தேசிய காங்கிரசு

தொகு

இதற்கு முன்பு, அவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும், தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.[7]

சிவசேனா

தொகு

பிரியங்கா, 19 ஏப்ரல் 2019 அன்று உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.[8] மகாராஷ்டிரா மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

குறிப்புகள்

தொகு
  1. "Congress's new media team to meet on Wednesday-Politics News – IBNLive Mobile". CNN-IBN. 28 May 2013. Archived from the original on 3 August 2014. பார்க்கப்பட்ட நாள் 26 January 2017.
  2. "Priyanka Chaturvedi – Twitter". Twitter. 21 August 2013. Archived from the original on 30 September 2013. பார்க்கப்பட்ட நாள் 30 September 2013.
  3. 3.0 3.1 "26/11 attack defining moment for Priyanka Chaturvedi". The Times of India. 20 April 2019. https://timesofindia.indiatimes.com/elections/news/26/11-attack-defining-moment-for-priyanka-chaturvedi/articleshow/68961676.cms. 
  4. "Expecting perfection in motherhood – Analysis – DNA". Daily News and Analysis. 16 September 2012. பார்க்கப்பட்ட நாள் 30 September 2013.
  5. 5.0 5.1 Sharma, Anjali. "Priyanka Chaturvedi A Versatile Leader in Indian Politics". theceo.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-24.
  6. "People in villages, small towns worst hit by BJP's demonetisation move". Times of India. 2016-11-17. பார்க்கப்பட்ட நாள் 2024-10-23.
  7. "People in villages, small towns worst hit by BJP's demonetisation move". Times of India. 2016-11-17. பார்க்கப்பட்ட நாள் 2024-10-23.
  8. "Priyanka Chaturvedi quits Congress, joins Shiv Sena". TIMESOFINDIA.COM. 2019-04-19. பார்க்கப்பட்ட நாள் 2024-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_சதுர்வேதி&oldid=4126195" இலிருந்து மீள்விக்கப்பட்டது