பிரியங்கா ஜவால்கர்
பிரியங்கா ஜவால்கர் (Priyanka Jawalkar) (பிறப்பு 12 நவம்பர் 1992) ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். குறிப்பாக இவர் தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றுகிறார். 2017ஆம் ஆண்டு வெளியான காலா வரம் ஆயே[1] படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், டாக்ஸிவாலா[2], திம்மருசு[3], எஸ்ஆர் கல்யாணமண்டபம்[4] போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிரியங்கா ஜவால்கர் | |
---|---|
2018இல் பிரியங்கா | |
பிறப்பு | 12 நவம்பர் 1992 அனந்தபூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவன, ஐதராபாத்து |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2017—present |
ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும்
தொகுபிரியங்கா , 12 நவம்பர் 1992இல்[5][6] ஆந்திராவின் அனந்தபூரில் ஓர் மராத்தி பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[7] கணினி அறிவியல் பட்டதாயான இவர், ஐதராபாத்து, தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் வடிவமைப்பு தொடர்பான சான்றிதழ் பட்டம் பெற்றுள்ளார்.[8] தனது புகைப்படங்களில் சிலவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய பிறகு திரைப் படங்களுக்காக அணுகப்பட்டார்.[9] 2017 ஆம் ஆண்டு சம்பத் வி.குமார் இயக்கிய தெலுங்கு மொழித் திரைப்படமான காலா வரம் ஆயே என்ற படத்தில் அறிமுகமானார். நவம்பர் 2018இல், இவரது இரண்டாவது படமான டாக்ஸிவாலா வெளியிடப்பட்டது. இது ராகுல் சங்க்ரித்யன் என்பவர் இயக்கியிருந்தார்.[10] இவரது நடிப்பில் 2021இல் இரண்டு படங்கள் வெளிவர உள்ளன.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kala Varam Aaye Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, பார்க்கப்பட்ட நாள் 2020-06-21
- ↑ Taxiwala Review {3/5}: Taxiwaala entertains in parts but is let down by an unconvincing climax, பார்க்கப்பட்ட நாள் 2020-06-21
- ↑ Dundoo, Sangeetha Devi (30 July 2021). "'Thimmarusu' movie review: Satya Dev sparkles in this legal thriller" – via www.thehindu.com.
- ↑ "SR Kalyana Mandapam Movie Review: An antiquated tale stuck in time" – via timesofindia.indiatimes.com.
- ↑ "Epitome of grace and elegance in embroidered lehenga and backless choli". The Times of India. 2020-11-12.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Script is always my first preference, says actress Priyanka Jawalkar". The Times of India. 10 August 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Chowdhary, Y. Sunita (2018-03-01). "Priyanka Jawalkar on 'Taxiwala'" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/priyanka-jawalkar-on-taxiwala/article22892322.ece.
- ↑ Pasupuleti, AuthorPriyanka. "Priyanka Jawalkar shares about being a celebrity". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-21.
- ↑ Pasupuleti, AuthorPriyanka. "Priyanka Jawalkar shares about being a celebrity". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-21.
- ↑ "It's not easy for non-Telugu actors to survive in Tollywood: Taxiwaala star Priyanka Jawalkar". The Indian Express (in Indian English). 2018-11-15. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
- ↑ Adivi, Sashidhar (2020-03-23). "Discovering her calling in acting". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-21.