பிரியம்வதா மொகந்தி எச்மதி
பிரியம்வதா மொகந்தி எச்மதி ( Priyambada Mohanty Hejmadi ) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அறிவியலாளர் ஆவார். கல்வியாளர், கலை எழுத்தாளர், உயிரியலாளர், பாரம்பரிய நடனக் கலைஞர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.[1] 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பான் பிகாரி மைதியின் கீழ் சிறுவயதிலிருந்தே ஒடிசி எனப்படும் இந்திய பாரம்பரிய நடன கலையில் தேர்ச்சி பெற்றார். 1954 ஆம் ஆண்டு புது தில்லியில் நடந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான இளைஞர் விழாவில் நடைபெற்ற இவரது ஒடிசி நடன நிகழ்ச்சி, விழாவில் கலந்து கொண்ட அங்கேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற கலை விமர்சகர் சார்லசு ஃபேப்ரி மூலம் பன்னாட்டு கவனத்தை ஈர்த்தது. [2]
பிரியம்வதா மொகந்தி எச்மதி | |
---|---|
2014 ஆம் ஆண்டு புவனேசுவரத்தில் நடந்த 22வது ஒடியத் திரைப்பட விருது விழாவின் போது பிரியம்வதா மொகந்தி எச்மதி. | |
பிறப்பு | 18 நவம்பர் 1939 இந்தியா |
பணி | முன்னாள் துணைவேந்தர், சம்பல்பூர் பல்கலைக்கழகம் ஆசிரியர்(கலை, கலாச்சாரம், சுற்றுச்சூழல்) விலங்கியல் பேராசிரியர் |
அறியப்படுவது | விருத்தியாக்க உயிரியல் ஒடிசி முன்னோடி |
விருதுகள் | பத்மசிறீ (அறிவியல் & பொறியியல்) சங்கீத நாடக அகாதமி விருது ஆளுநரின் பதக்கம் (ஒடிசி நடனம்) |
பிரியம்வதா முதுகலைப் பட்டம் பெற்றார், அதன்பின், ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்[3]
பிரியம்வதா இந்திய அறிவியல் அகாடமியின் உறுப்பினர் ஆவார்.[3] நடனம் மற்றும் விலங்கியல் இரண்டிலும் ஏராளமான கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார்.[2] ஒடிசி ஒரு பாரம்பரிய இந்திய நடன வடிவம், என்ற இவருடைய நூல் ஒடிசியின் என்ற இந்திய பாரம்பரிய வடிவத்தின் வரலாறு மற்றும் பரிணாமத்தை விரிவுபடுத்துகிறது.[4] விலங்கியல் தொடர்பான சூழலியல், இனப்பெருக்க முறைகள் குறித்த நூல் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார்..[5]
2013 ஆம் ஆண்டில் " ஒடிசி நிருத்ய சன்மான்"[6] என்ற விருதைப் பெற்றார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு 1998 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ என்ற இவருக்கு வழங்கியது.[7]
இதனையும் பார்க்கவும்
தொகு* ஒடிசி
சான்றுகள்
தொகு- ↑ "Mukteswar Dance Festival Concludes". Odisha360. 2015. பார்க்கப்பட்ட நாள் October 25, 2015.
- ↑ 2.0 2.1 Priyambada Mohanty Hejmadi (April 2010). "Rushdie does an Odissi". Narthaki. http://www.narthaki.com/info/articles/art271.html.
- ↑ 3.0 3.1 "IAS Fellow". Indian Academy of Sciences. 2015. பார்க்கப்பட்ட நாள் October 25, 2015.
- ↑ Priyambada Mohanty Hejmadi, Ahalya Hejmadi Patnaik (2007). Odissi: An Indian Classical Dance Form. Aryan Books International. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173053245.
- ↑ Hejmadi, Priyambada Mohanty (1988). A study of ecology, breeding patterns, development and karyotype patterns of the olive ridley, Lepidochelys Olivacea of Gahirmatha, Orissa. Pranikee. Utkal Univ., Dep. of Zoology, Zoological Soc. of Orissa.
- ↑ "Odissi danseuse Padmashree Priyambada Mohanty Hejmadi conferred with Odissi Nrutya Sanman-2013". Orissa Diary. 7 January 2013. Archived from the original on 15 January 2013. பார்க்கப்பட்ட நாள் October 25, 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on அக்டோபர் 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
மேலும் படிக்க
தொகு- Priyambada Mohanty Hejmadi, Ahalya Hejmadi Patnaik (2007). Odissi: An Indian Classical Dance Form. Aryan Books International. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173053245.