பிரேசிலிய ஒலிம்பிக் குழு

பிரேசிலிய ஒலிம்பிக் குழு (Brazilian Olympic Committee), (போர்த்துக்கேய மொழி: Comitê Olímpico do BrasilCOB) பிரேசிலிய விளையாட்டுத் துறையில் மிக உயரிய அமைப்பாகும்; இது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பிரேசிலின் பங்கேற்பை கட்டுப்படுத்துகின்றது. சூன் 8, 1914இல் நிறுவப்பட்டபோதும் இதன் அலுவல்முறையான செயற்பாடுகள் முதல் உலகப் போரால் தடைபட்டு 1935ஆம் ஆண்டுகளிலிருந்து செயல்படுகின்றது. துவக்கத்தில் இது பிரேசிலின் படகுவலிப்பு சங்கங்களின் கூட்டமைப்புத் தலைமையிடத்திலிருந்து செயல்பட்டது.

பிரேசிலிய ஒலிம்பிக் குழு
Comitê Olímpico do Brasil
பிரேசிலிய ஒலிம்பிக் குழு Comitê Olímpico do Brasil logo
பிரேசிலிய ஒலிம்பிக் குழு
Comitê Olímpico do Brasil - அடையாளச்சின்னம்
நாடு/பகுதி பிரேசில்
குறியீடுBRA
உருவாக்கப்பட்டதுசூன் 8, 1914
ஏற்பளிக்கப்பட்டதுசூன் 8, 1935
கண்டக்
கழகம்
பான் அமெரிக்க விளையாட்டு அமைப்பு
தலைமையகம்இரியோ டி செனீரோ
தலைவர்கார்லோசு ஆர்த்தர் நுசுமான்
பொதுச் செயலாளர்கார்லோசு இராபர்ட்டோ ஓசோரியோ
இணையத்தளம்http://www.cob.org.br/

பி.ஒ.குழு பலவகைகளில் வருமானம் ஈட்டுகின்றது; முதன்மையான வருமானமாக பிரேசிலிய தேசிய குலுக்கல் பரிசுச் சீட்டு இலாபத்தில் 2% இதற்கு வழங்கப்படுகின்றது. இதன் தற்போதைய தலைவராக கார்லோசு ஆர்த்தர் நுசுமான் உள்ளார். இதன் முதன்மைத் திட்டமாக இரியோ டி செனீரோவில் நடக்கவிருக்கும் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உள்ளன.[1]

மேற்சான்றுகள் தொகு

  1. "About Rio 2016 Summer Olympics". Rio 2016 Olympics Wiki. Archived from the original on 8 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு