பிரேமலகாகி சவான்

இந்திய அரசியல்வாதி

பிரேமலாபாய் சவான் (Premalabai Chavan) (2 ஜூலை 1918 - 8 ஜூலை 2003) பிரேமலகாகி எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார். அகில இந்திய மகளிர் துடுப்பாட்டச் சங்கத்தின் நிறுவனர்-தலைவராகவும் இருந்தார்.[1] இந்திய சமூகத்தில் பெண்களின் நலனுக்கு பங்களித்த பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டார். இவர் ஒரு பெண் உறுப்பினராக மகாராட்டிராவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான (நான்கு முறை) நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களுக்கான சாதனையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.[2]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சவான் குசராத்தின் பரோடா மாவட்டத்தில் எம்.என். ராவ் ஜக்தேல் என்பவருக்கு மகளாகப் பிறந்தார்.[3] இந்தூரில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். அதன் பிறகு இவர் மும்பையின் புனித சேவியர் கல்லூரிக்கு தன்து உயர் கல்விக்காகச் சென்றார். அங்கு மாண்டிசோரி கல்வியில் சான்ரிதழ் பட்டம் பெற்றார்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினரான தாஜிசாகேப் சவான் என்பவரை 27 ஏப்ரல் 1942 இல் திருமணம் செய்து கொண்டார்.[4] மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் பிருத்விராசு சவான் இவர்களது மகனவார். இவரைத் தவிர நிருபமா அஜித்ராவ் யாதவ், வித்யுலதா வியாங்கத்ராவ் கோர்படே என்ற இரு மகளகளும் இவர்க்கு உள்ளனர்.[5]

அரசியல் வாழ்க்கை தொகு

மக்களவையும் மாநிலங்களவையும் தொகு

இவர், 1952-60 வரை மகாராட்டிராவின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக இருந்தார். பின்னர், ஐந்தாவது மக்களவை (1971-77), ஆறாவது மக்களவை (1977-79), எட்டாவது மக்களவை (1984-89), மாநிலங்களவை (1980-84) ஆகியவற்றில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவரது கணவர் இறந்த பிறகு, 1973இல் நடந்த இடைத்தேர்தலில் மக்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த மூன்று முறை கராத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் நெருக்கடி நிலைக்குப் பிந்தைய பிளவுக்குப் பிறகு, மாநிலத்தில் பல கட்சித் தலைவர் தேவ்ராஜ் அர்ஸ் தலைமையிலான காங்கிரசுடன் இணைந்தபோது, இவர் இந்திரா காந்தியுடன் இருக்க விரும்பினார். மேலும் அந்த நேரத்தில் காங்கிரசின் மாநில தலைவராகவும் பணியாற்றி வந்தார். 1980இல் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்திரா காந்தி 1981இல் மாநிலங்களவைக்கு இவரை பரிந்துரைத்தார். 1989 இல் கராத்தில் இருந்து மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ்காந்தி பாராளுமன்றத்தில் உறுப்பினராக தொடரும்படி கேட்டபோது, மறுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.[4][6]

இவர் 1991 வரை மக்களவையில் பங்கேற்றார்.[7]

குழு அனுபவம் தொகு

1985-87 வரை இவர் துணைச் சட்டம், அதிகாரப்பூர்வ மொழி மற்றும் வணிக ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தார். 1987-89 வரையிலான விதிகள் குழுவின் உறுப்பினர்; ஆலோசனைக் குழுவின் உறுப்பினர், அணுசக்தித் துறை, விண்வெளி, மின்னணுவியல், பெருங்கடல் வளர்ச்சி மற்றும் 1990இல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் போன்றவற்றிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.[4]

சமூக நடவடிக்கைகள் தொகு

இவர் கராத்தில் உள்ள பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் ஆவார். 1951 இல் கராத்தில் முதல் மாண்டிசோரி பள்ளியைத் தொடங்கினார். இதைத் தவிர, 1950இல் கராத்தில் மகிளா மண்டல இயக்கத்தைத் தொடங்கினார். பின்னர், 1973இல், அகில இந்திய மகளிர் துடுப்பாட்டச் சங்கத்தை நிறுவினார்.

இறப்பு தொகு

இவர் 8 சூலை 2003 அன்று இறந்தார். இவரது இவரது கணவரும் இருவரும் வெவ்வேறு ஆண்டுகளில் சூலை 8 (1973) அன்று இறந்தனர்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Womens Cricket Association of India". Static.espncricinfo.com. 1973-12-23. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
  2. "Lok Sabha". 164.100.47.132. Archived from the original on 16 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
  3. "Members Bioprofile". 164.100.47.132. Archived from the original on 2013-10-15. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
  4. 4.0 4.1 4.2 4.3 "Members Bioprofile". 164.100.47.132. Archived from the original on 2013-10-15. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15."Members Bioprofile" பரணிடப்பட்டது 2013-10-15 at the வந்தவழி இயந்திரம். 164.100.47.132. Retrieved 15 October 2013. பிழை காட்டு: Invalid <ref> tag; name "biodata" defined multiple times with different content
  5. Nickname:*. "News portal from Nanded". Nandednewslive. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Camil Parkhe, TNN 19 Mar 2002, 02.11am IST (2002-03-19). "Prithviraj Chavan continues family legacy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2014-01-27. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  7. Prithviraj Chavan#Early life
  8. Nickname:*. "News portal from Nanded". Nandednewslive. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.[தொடர்பிழந்த இணைப்பு]Nickname:*. "News portal from Nanded"[தொடர்பிழந்த இணைப்பு]. Nandednewslive. Retrieved 15 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமலகாகி_சவான்&oldid=3742338" இலிருந்து மீள்விக்கப்பட்டது