பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நடிகரும், அரசியல்வாதியும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் மனைவியாவார். தற்போது தேமுதிக பொதுச் செயலாளராக உள்ளார். இவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். தேசிய அளவிலான தனித்திறன் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனையும் ஆவார்.[சான்று தேவை] 1990 சனவரி 31 அன்று விஜயகாந்த் பிரேமலதாவை மணந்தார். இவர்களது திருமணம் மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மு. கருணாநிதி தலைமையில் நடந்தது.[1] விஜயகாந்த் - பிரேமலதா இணையருக்கு விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். பிரேமலதா தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.[2][2][3] இவர் 2018இல் கட்சியின் பொருளாளராகவும், 2023இல் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
பிரேமலதா | |
---|---|
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் 3வது பொதுச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 திசம்பர் 2023 | |
முன்னையவர் | விஜயகாந்த் |
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் பொருளாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 அக்தோபர் 2018 | |
முன்னையவர் | ஏ. ஆர். இளங்கோவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மதராசு, சென்னை மாநிலம், இந்தியா (தற்போதைய சென்னை, தமிழ்நாடு) | 18 மார்ச்சு 1969
அரசியல் கட்சி | தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் |
துணைவர்(கள்) | விஜயகாந்த் (தி. 1990; இற. 2023) |
பிள்ளைகள் | விஜய் பிரபாகரன், சண்முகபாண்டியன் |
வாழிடம் | 54 – 12ஏ, கண்ணம்மாள் தெரு, சாலிகிராமம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
புனைப்பெயர் | அண்ணியார் |
தேர்தல் முடிவுகள்
தொகுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தொகுதேர்தல் | சட்டமன்றத் தொகுதி | கட்சி | முடிவுகள் | வாக்குகள் % | எதிர்த்து போட்டியிட்டவர் | எதிர்த்து போட்டியிட்டவர் கட்சி | வாக்குகள் % |
---|---|---|---|---|---|---|---|
2021 | விருத்தாச்சலம் | தேமுதிக | தோல்வி | 13.17 % | ஆர். இராதாகிருஷ்ணன் | இந்திய தேசிய காங்கிரசு | 39.17 % |
மேற்கோள்கள்
தொகு- ↑ "பிரேமலதா விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு". சமயம் செய்திகள். 9 ஏப்ரல் 2019. Retrieved 10 ஏப்ரல் 2019.
- ↑ 2.0 2.1 "தேசிய முற்போக்கு திராவிட கழகம்". விகடன். Retrieved 10 ஏப்ரல் 2019.
- ↑ "Premalatha Vijayakanth Wiki, Biography, Age, Caste, Images". Newsbugz. Retrieved 10 ஏப்ரல் 2019.