பிளாக் ஸ்வான் (திரைப்படம்)

பிளாக் ஸ்வான் (Black Swan) என்பது 2010 ஆம் ஆண்டைய அமெரிக்க உளவியல் திகில் திரைப்படம் ஆகும்.[3][4]  ஹின்ஸ் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு மார்க் ஹேமேன், ஜான் மெக்லாக்லின், மற்றும் ஆண்ட்ரஸ் ஹென்ஸ் ஆகியோர் திரைக்கதையை எழுத, படத்தை டேரன் அரோனாப்ஸ்கி. இயக்கியுள்ளார். இப்படத்தில்  நேடலி போர்ட்மன், வின்சென்ட் காஸெல், பார்பரா ஹெர்ஷே, வினோனா ரைடர், மிலா குனிஸ், ஆகியோர் நடித்துள்ளனர். கதையானது நியூயார்க் நகரத்தை அடிப்படையாக செயல்படும் பாலே நடன நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கியின் ஸ்வான் லேக் என்னும் நாடகத்தை நடத்துவதைப் பற்றியதாக அமைந்துள்ளது. 

பிளாக் ஸ்வான்Black Swan
இயக்கம்டேரன் அரோனாப்ஸ்கி
திரைக்கதை
  • மார்க் ஹேமன்
  • ஆண்ட்ரஸ் ஹென்ஸ்
  • ஜான் மெக்லாலின்
இசைகிளின்ட் மான்சல்
நடிப்பு
ஒளிப்பதிவுமத்தேயு லிபடிக்
படத்தொகுப்புஆண்ட்ரூ வைஸ் ப்ளூம்
விநியோகம்பாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 1, 2010 (2010-09-01)(வெனிஸ்)
திசம்பர் 3, 2010 (United States)
ஓட்டம்108 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$13 மில்லியன்[2]
மொத்த வருவாய்$329.4 மில்லியன்

இப்படம் பொதுவாக ஒரு உளவியல் திகில் படமாக விவரிக்கப்படுகிறது. படத்தின் கதாநாயகி படத்தில் இடம்பெறும் நாடகத்தில் பிளாக் ஸ்வான் என்ற பாத்திரத்தில், நடிக்கத் தகுந்த கலை நுணுக்கத்தை அடைவதற்கு உளவியல்ரீதியாகவும், உடலியல்ரீதியாகவும் சவால்களை சந்தித்து, சிறப்பாக நடித்து முடிப்பதைப் பற்றியதாக இக்கதை அமைந்துள்ளது.[5]

இந்தத் திரைப்படம் 2010 செப்டம்பர் 1 அன்று 67 வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்கத் திரைப்படமாக திரையிடப்பட்டது. பின்னர் இது அமெரிக்காவில் 2010 திசம்பர் 3 முதல்  வரம்பிற்குட்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர்  திசம்பர் 17 அன்று பரவலாக பல அரங்குகளில் வெளியிடப்பட்டது. படமானது போர்ட்மேனின் நடிப்பு மற்றும் அரோனோஃப்ஸ்கியின் இயக்கத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படம் உலகளவில் $329 மில்லியனை ஈட்டியது. இந்தத் திரைப்படமானது சிறந்த படம்சிறந்த இயக்குநர் உள்ளிட்ட  ஐந்து அகாடமி விருது போன்ற பரிந்துரைகளைப் பெற்றது; இந்த படத்தில் நடித்த போர்ட்மன் சிறந்த நடிகை விருதை வென்றார். இது அல்லாது மேலும் பல பிற விருதுகளைப் பெற்றார்.

கதை தொகு

பால்லரீனா நினா (நடாலி போர்ட்மேன்) நியூயார்க்கில் பாலே நடனம் பயின்று வரும் ஒரு பெண். சிறுவயது முதலே நடனத்தை மட்டுமே லட்சியமக்கொண்டு அவளது தாயால் வளர்க்கப்படுகிறாள். அவள் சார்ந்த குழு, ஸ்வான் லேக் என்ற உருசிய நாடகக் கதையை அடிப்பையாகக் கொண்டு அதை பாலே நடனத்தில் அரங்கேற்ற முடிவு செய்கிறது. இந்த நாடகக் கதையில் இரண்டு பிரதான பாத்திரங்கள். அவை அன்பும் காதலும் கொண்ட வெள்ளை அன்னமான இளவரசி ஓடெட்டாக மற்றும் தந்திரமும் வஞ்சமும் கொண்ட மந்திரவாதியின் பெண்ணாகிய கருப்பு அன்னமான ஒடீலாக என்ற இரு வேடங்களிலும் ஒரே கதாநாயகியே நடிக்கவேண்டும் என விரும்புகிறார் நாடக இயக்குநர்.

நாடகத்தின் கதாநாயகியாக நினா அறிவிக்கப்பட்டு, நாடகப் பயிற்சி ஆரம்பிக்கிறது. பயிற்சியில் வெள்ளை அன்னத்தின் வேடத்துக்கு உரிய நடனத்தை, நினா சிறப்பாக வெளிப்படுத்துகிறாள். ஆனாள், கறுப்பு அன்னத்தின் நடனத்தை சரியாக வெளிப்படுத்த இயலாமல் தடுமாறுகிறாள். கருப்பு அன்ன வேடத்தில் திருத்தங்களைச் சொல்லி அதட்டிக் கொண்டேயிருக்கும் நாடக இயக்குநரான தாமஸின் ஆணைகள் அவளை மிரள வைக்கின்றன.

இந்த நாடக ஒத்திகைக்கு வரும் லிலி என்ற பெண், தனது வேடத்தைப் பறித்துக்கொள்ள சதி செய்வதாக நினா எண்ணணுகிறாள். இதனால் அவள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிறாள். இதன் விளைவாக அவள் அடையும் உளப்பாதிப்பு அவள் முன் விசித்திரமான உருவங்களை தோற்றுவித்து குழப்பமான அனுபவத்திற்கு உட்படுத்துகிறது. இவை அவ்வப்போது அவளுக்குத் தோன்றி குழப்புகின்றன. இதனால் நடன நிகழ்ச்சியன்று காலையில் தாமதமாக துயிலெழுகிறாள். தன் தாய் தடுத்தும் கேளாமல், அவசர அவசரமாக ஒப்பனைகளையும் செய்துகொண்டு, பார்வையாளர்கள் மத்தியில் வெள்ளை அன்னமாக நடனமாடுகிறாள் அப்போது கீழே விழும் நினா மீண்டும் சுதாரித்து எழுந்து ஆடி அந்தக் காட்சியை முடிக்கிறாள்.

அடுத்த காட்சிக்கு கறுப்பு அன்னமாக ஒப்பனை செய்துகொள்ள ஒப்பனை அறைக்கு வரும் நினாவைப் பார்த்து, அங்கு, கறுப்பு அன்ன உடையணிந்து கொண்டு இருக்கும் லிலி அவளைப் பார்த்து நீ கீழே விழுந்ததால், இனி கறுப்பு அன்னமாக நடனமாடப் போவது நான் தான் என்கிறாள். இதனால் கோபமுற்று அவள் வயிற்றில் ஒரு கண்ணாடித் துண்டால் குத்திக் கொன்று பின்னர், லிலியின் உடலை அங்கேயே மறைத்தும் விடுகிறாள். கோபத்தில், அவளது கண்கள் சிவக்க, அவளது கைகள், மெல்ல மெல்ல கறுப்பு அன்னத்தின் இறக்கைகளாக மாறுகிறது. கறுப்பு அன்னமாகவே முழுவதாக அவள் மாறிவிட்டதை அவள் உணர்கிறாள். வெளியே வந்து மேடையில் ஆக்ரோஷமாக ஆடுகிறாள். பார்வையாளர்கள் மெய் மறந்து போகிறார்கள்

இதன்பின், மறுபடியும் வெள்ளை அன்னமாக உடைமாற்றிக்கொள்ள ஒப்பனை அறைக்கு வரும் நினா, அங்கே லிலியின் உடலைக் காணாமல் தவிக்கிறாள். அப்போது கதவு தட்டப்படுகிறது. திறந்தால் வெளியே லிலி. நினாவின் நடனத்தை பாராட்டுகிறாள். பெரும் குழப்பத்துக்கு ஆளாகிறாள் நினா. தனது வயிற்றை எதேச்சையாகப் பார்க்க, அவளது வயிற்றில் இருந்து ரத்தகாயம். அந்தக் காயத்தினுள், ஒரு கண்ணாடித்துண்டு.

நினா வெள்ளை அன்னமாக மாறி நடனத்தின் இறுதிப் பகுதியில் ஆடுகிறாள். கடைசியில் வெள்ளை அன்னம் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். உயரமான பகுதியிலிருந்து கீழே இருக்கும் மெத்தையில் குதிக்கிறாள். பார்வையாளர்கள் ஆர்ப்ப‌ரிக்க, தாமஸ் ஓடி வருகிறார். நினாவின் வயற்றிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்க, நான் நன்றாக ஆடியதாக நினைக்கிறேன் என்று சொல்லி மயங்கிவிடுகிறாள்.

மேற்கோள்கள் தொகு

  1. "Black Swan (15)". British Board of Film Classification. November 19, 2010. Archived from the original on பிப்ரவரி 8, 2018. பார்க்கப்பட்ட நாள் September 21, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Zeitchik, Steven (September 17, 2010). "Darren Aronofsky's 'Black Swan' a feature film of a different feather". The Korea Herald (McClatchy-Tribune Information Services). http://www.koreaherald.com/entertainment/Detail.jsp?newsMLId=20100917000771. பார்த்த நாள்: February 4, 2012. 
  3. "Direct Effect Season 1, Episode 7 Darren Aronofsky of BLACK SWAN". பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம் Fox Movie Channel Originals. TV Guide. October 8, 2011.
  4. Whipp, Glenn (December 9, 2010). "'Black Swan' director Darren Aronofsky likes a challenge". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் February 11, 2017.
  5. Skorin-Kapov, Jadranka (2015) Darren Aronofsky's Films and the Fragility of Hope, p. 96, Bloomsbury Academic