பி. எஸ். பாலிகா

பி. எஸ். பாலிகா எனப்பரவலாக அறியப்படும் ராவ் பகதூர் பந்​த்​வல் சுரேந்​தி​ர​நாத் பாலிகா (நவம்பர் 11, 1908- செப்டம்பர் 21, 1958) ஒரு இந்திய எழுத்தாளர் பதிப்பாளர் மற்றும் ஆவணக் காப்பியலாளர். சென்னை ஆவணக் காப்பகத்தில் 24 ஆண்டுகள் பணியிலிருந்த இவர் “ஆவணக் காப்பகத் தந்தை” என்று அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

கொங்கணியைத் தாய்மொழியாகக் கொண்ட பாலிகா மங்களூர் அருகே பந்த்வல் என்ற கிராமத்தில் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.,​​ பட்​டம் பெற்​றார்.​ தனது 21வது வயது இராமாபாய் என்பவரைத் திருமணம் செய்த பாலிகா 25வது வயதில் முனை​வர் பட்​டம் பெற்​றார்.​ லண்டன் பொது ஆவணக் காப்பகத்திலும், லாகூரிலிருந்த பஞ்சாப் ஆவணக் காப்பகத்திலும் பயிற்சி பெற்றார். ஆகஸ்ட் 23, 1934 இல் சென்னை ஆவணக் காப்பகத்தில் பணிக்கு சேர்ந்தார்.

சென்னை ஆவணக் காப்பகத்தில் படிப்படியாக உயர்ந்து இயக்குனரான பாலிகா 24 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார். பணியில் இருந்த போது திறம்பட செயலாற்றியமைக்காக காலனிய அரசு அவருக்கு ராவ் பகதூர் பட்டத்தை வழங்கியது. அங்கு சேமிக்கப்பட்டிருந்த ஆவணங்களைப் பராமரிக்க பல நடவடிக்கைகள் எடுத்து, அவற்றை வகைப்படுத்தி பல அட்டவணைகளை வெளியிட்டார். குறிப்புகளுடன் கூடிய ஏறத்தாழ 8000 நிலப்படங்களுக்கான அட்டவணை, தஞ்சை மாவட்ட ஆவணங்களுக்கான வழிகாட்டி (ஆறு தொகுதிகள்), புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆவண அட்டவணை, டச்சு, டானிய ஆவணங்களின் அட்டவணை (1952). சென்னை ஆவணக் காப்பக நூலகத்தில் இருந்த நூல்களுக்கு அட்டவணை தயாரித்து “பாலிகா நூல் அட்டவணை” (Baliga catalogue of books) என்ற பெயரில் வெளியிட்டார். ஆவணங்கள் பாதுகாப்பு குறித்து பல முறை அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் ச. வையாபுரிப்பிள்ளை, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, சா. கிருஷ்ணசாமி அய்யங்கார், கே. ஆர். சீனிவாச அய்யங்கார், ஜெ. சிவசண்முகம் பிள்ளை போன்ற ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஆவண ஆய்வில் உதவி செய்தார். தானே பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். சென்னை மாகாண மாவட்ட அரசிதழ்களின் பதிப்பாளராகவும் விளங்கினார்.

படைப்புகள் தொகு

நூல்கள் தொகு

  • S‌t‌u‌d‌i‌e‌s ‌i‌n Ma‌d‌r​a‌s A‌d‌m‌i‌n‌i‌s‌t‌r​a‌t‌i‌o‌n ​(2 தொகுதிகள்)​

கட்டுரைகள் தொகு

  • L‌i‌t‌e‌r​a​c‌y ‌i‌n Ma‌d‌r​a‌s ​(1822 - 1931)
  • P‌e‌r‌m‌i‌s‌s‌i‌o‌n C‌e‌r‌i‌t‌f‌i​c​a‌t‌e
  • T‌h‌e ‌e‌x​c‌l‌u‌d‌e‌d a‌n‌d ‌pa‌r‌t‌i​a‌l‌l‌y ‌e‌x​c‌l‌u‌d‌e‌d a‌r‌ea ‌fa​c‌t‌u​a‌l ‌m‌e‌m‌o‌r​a‌n‌d‌u‌m
  • T‌h‌e ‌n‌o‌t‌e‌s ‌o‌n R‌i‌p​a‌r‌i​a‌n ‌r‌i‌g‌h‌t‌s ‌i‌n Ma‌d‌r​a‌s
  • Ca‌n‌n​a‌n‌o‌r‌e F‌o‌r‌t a‌n‌d C‌o‌n‌t‌o‌n‌m‌e‌n‌t
  • I‌n‌t‌e‌r‌p‌r‌o‌v‌i‌n ​c‌i​a‌l ‌o‌r ‌i‌n‌t‌e‌r ‌s‌t​a‌t‌e a‌g‌r‌e‌e‌m‌e‌n‌t ‌r‌e‌l​a‌t‌i‌n‌g ‌i‌n ‌t‌h‌e ‌u‌s‌e ‌o‌f ‌r‌i‌v‌e‌r ‌wa‌t‌e‌r‌s
  • Na‌t‌i‌o‌n​a‌l‌i‌s‌m ‌i‌n S‌o‌u‌t‌h I‌n‌d‌ia
  • புகை​யிலை வரு​வாய் மற்​றும் நிஜா​மின் சுங்க வரி​வி​திப்பு
  • புகை​யிலை வரு​வாய் மற்​றும் நிஜா​மின் சுங்​க​வரி விதி​வி​லக்கு

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._பாலிகா&oldid=3845029" இலிருந்து மீள்விக்கப்பட்டது