பீகார் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு மாநகராட்சிக் குழுமம்

பீகார் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு மாநகராட்சிக் குழுமம் (Bihar Urban Infrastructure Development Corporation Limited) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள நகர்ப்புறத் திட்டமிடல் நிறுவனமாகும். இவ்வமைப்பு பீகார் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பொறுப்பேற்று செயல்படுகிறது. 2009 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதி நிறுவனச் சட்டம் 1956 பிரிவு 1 இன் அடிப்படையில் இக்குழுமம் அமைக்கப்பட்டது.[1] மாநிலத்தில் வளர்ச்சி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பீகார் அரசுக்கு வாய்ப்பளிக்கும் ஓர் உச்ச அமைப்பாக இக்குழுமம் செயல்படுகிறது.[2][3] குழுமத்தின் தலைமையகம் பாட்னாவின் மவுரியா லோக் மாவட்டத்தில் உள்ளது.

பீகார் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு மாநகராட்சிக் குழுமம்
Bihar Urban Infrastructure Development Corporation Limited
துறை மேலோட்டம்
அமைப்பு16 சூன் 2009
ஆட்சி எல்லைபீகார் அரசு
தலைமையகம்303, மவுரியா கோபுரம், 3 ஆவது தளம், மவுரியா லோக் வளாகம், புத்தா காலனி, பட்னா-800001
அமைச்சர்
  • சுரேசு குவார் சர்மா, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்
அமைப்பு தலைமைகள்
  • சைதன்யப் பிரசாத்து, இ.ஆ.ப
    , முதன்மைச் செயலர், நகர்ப்புபுற வீட்டுவசதி மேம்பாடு
  • சந்திர சேகர் பிரசாத்து சிங், இ.ஆ.ப
    , மேலாண்மை இயக்குநர்
வலைத்தளம்buidco.in
buidco.bih.nic.in
urban.bih.nic.in

சவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் பணி, தேசிய கங்கா நதி படுகை ஆணையம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி நிதியளித்த நகர்ப்புறத் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கான பீகார் அரசாங்கத்தின் செயலாக்க அமைப்பு நிறுவனமாகவும் பீகார் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு மாநகராட்சிக் குழுமம் இயங்குகிறது.[4]

இயக்குநர்கள் குழுவால் இக்குழுமம் நிர்வகிக்கப்படுகிறது நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் இக்குழுவுக்குத் தலைமை தாங்குகிறார்கள். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று மாவட்ட நகர்ப்புற மேம்பாட்டு முகமையும் பீகார் நகர்ப்புற மேம்பாட்டு முகமையும் பீகார் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு மாநகராட்சிக் குழுமத்துடன் இணைக்கப்பட்டன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Introduction & Objectives". buidco.bih.nic.in. Archived from the original on 14 February 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  2. Sayantanee Choudhury,TNN (9 September 2014). "Bihar Urban Infrastructure Development Corporation, PMC to prepare Ganga ghats for Chhath". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  3. Sengupta, Joy (12 July 2014). "Project fence shock dilutes water dream". The Telegraph. Archived from the original on 14 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Piyush Kumar Tripathi (15 November 2014). "BUIDCo record signals light delay". The Telegraph. Archived from the original on 14 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Organizational Chart". buidco.in. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.