பீட்டர் லுகர்

பீட்டர் லுகர் (Peter Luger)(ஜனவரி 22 1866-ஜனவரி 21 1941) ஒரு ஜெர்மன் சமையல்காரர் மற்றும் உணவக நிறுவனர் ஆவார். இவர் 1877-இல் பீட்டர் லுகர் ஹவுஸை நிறுவினார்.[1][2]

பீட்டர் லுகர்
பிறப்பு(1866-01-22)சனவரி 22, 1866
பவேரியா, ஜெர்மனி
இறப்புசனவரி 21, 1941(1941-01-21) (அகவை 74)
புரூக்ளின், நியூயார்க்
தேசியம்ஜெர்மன்
அறியப்படுவதுபீட்டர் லுகர் ஸ்டீக் ஹவுஸ்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

பீட்டர் லுகர் ஜெர்மனி பவேரியாவில் பிறந்தார். இவர் தமது பதிமூன்று வயதில் அமெரிக்காவில் குடியேறினார். பின் இவர் புரூக்ளின்-இல் வாழ்ந்தார்.[1]

உணவகத்தொழில் தொகு

1887-ஆம் ஆண்டில் வில்லியம்ஸ்பர்க் புரூக்ளின்-இல் பீட்டர் தன்னுடைய மருமகனான கார்லுடன் இணைந்து கார்ல் லுகர்ஸ் கபே, பில்லியர்ட்ஸ் மற்றும் பவுலிங் ஆலி என்று நிறுவனங்களைத் திறந்தார். பின்பு அக்கட்டிடத்தை மாற்றியமைத்து பீட்டர் லுகர் ஸ்டீக் ஹவுஸ் என்று பெயர் மாற்றினார். ஒவ்வொரு மாலையும் தம் உணவத்தைக் கண்காணிக்கும் நடத்தையின் காரணமாக அறியப்பட்டார். இவர் தனது உணவகத்திலே சுருக்கங்களற்ற சூழ்நிலையை உருவாக்கினார்.[3] ஆயினும் சில வட்டாரங்கள் மாறுபட்ட கருத்துகளை உணர்த்துகின்றன.[4] பீட்டர் தன் தந்தையின் மரணத்தின் பின் மரபுரிமையாகத் தொழிலைப் பெற்றார்.[5]

மறைவு தொகு

லுகர் 1941 ஜனவரி 21-இல் மறைந்தார். இவர் இறப்பின்போது இவர்தம் சொத்துமதிப்பு இருநூற்று நாற்பத்தோரு டாலர்களும் மற்றும் எண்ணூற்றாறு எஸ்டேட்டுகளும் ஆகும்.[6] உணவகத்தின் உரிமையானது அவரது மகன் ஃபிரடெரிக் லுகருக்கு வழங்கப்பட்டது. ஃபிரடெரிக்-ஆல் தம் தந்தையளவிற்கு உணவகத்தின் தரத்தினைப் பராமரிக்க இயலவில்லை. தம் தோல்வியுற்ற வணிகத்தைத் தம் நீண்டகால வாடிக்கையாளரான சோல் ஃபோர்மனுக்கு விற்றார். அவர் உணவகத்தின் தரத்தினை மீட்டெடுத்தார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Peter Ross (1899). A Standard History of Freemasonry in the State of New York: Including Lodge, Chapter, Council, Commandery and Scottish Rite Bodies. Lewis Publishing Company. பக். 323–. https://books.google.com/books?id=kWYiAAAAMAAJ&pg=PA323. 
  2. Witchel, Alex (28 April 2004). "After 40 Years, A Waiter Is the Boss". nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  3. Stephen C. Duer; Allan B. Smith (2010). Cypress Hills Cemetery. Arcadia Publishing. பக். 77–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7385-7343-4. https://books.google.com/books?id=FFDjbNPyMY8C&pg=PA77. 
  4. Brooklyn by Name: How the Neighborhoods, Streets, Parks, Bridges and More Got Their Names by Leonard Benardo and Jennifer Weiss. NYU Press: 2006. ISBN 0-8147-9946-9 pgs 27 – 28[1]
  5. "Peter Luger's Steak House". historic Greenpoint. பார்க்கப்பட்ட நாள் 6 September 2020.
  6. "Peter Luger Left $241,806 Estate" (PDF). fultonhistory.com. 1941-01-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  7. Kathleen Squires (2013-12-13). "The Next Generation: Peter Luger Steakhouse". zagat.com. Archived from the original on 2017-04-21. பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_லுகர்&oldid=3563853" இலிருந்து மீள்விக்கப்பட்டது