பீனா தாஸ்

இந்திய தேசியவாதியும், புரட்சியாருமாவார்

பீனா தாஸ் (1911-1986) என்பவர் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய புரட்சியாளர் மற்றும் தேசியவாதியும் ஆவார்.

பீனா தாஸ்
Bina Das
தாய்மொழியில் பெயர்বীণা দাস
பிறப்பு24 ஆகத்து 1911
பிரித்தானிய இந்தியா, வங்காள மாகாணம், கிருஷ்ணாநகர்
இறப்பு26 திசம்பர் 1986
இந்தியா, உத்திரப் பிரதேசம், ரிசிகேசு
அமைப்பு(கள்)யுகாந்தர் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
உறவினர்கள்பெனி மாதாப் தாஸ்

வாழ்க்கை

தொகு

குடும்பம்

தொகு

இவர் நன்கு அறியப்பட்ட பிரம்ம சாமாஜ ஆசிரியரான பெனி மாதாப் தாஸ் மற்றும் சமூக சேவகரான சரளா தேவி ஆகியோரின் மகளாவார். இவரது அக்காளான கல்யாணி தாஸ் (பட்டாச்சார்யா) ஒரு விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

பள்ளி மற்றும் கல்லூரி

தொகு

இவர் செயின்ட் ஜான்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆவார். மேலும் இவர் பெத்துன் கல்லூரி மாணவியும் ஆவார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளுதல்

தொகு

பீனா தாஸ் கொல்கத்தாவில் இருந்த பெண்களுக்கான ஒரு அரை புரட்சிகர அமைப்பான சத்ரி சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். 1932 பிப்ரவரி 6 ஆம் நாள் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளவந்த வங்காள ஆளுநர் ஸ்டான்லி ஜாக்சனை படுகொலை செய்ய முயன்றார். இவரிடம் இருந்த கைத்துப்பாக்கியானது மற்றொரு சுதந்திரப் போராளியான கமலா தாஸ் குப்தாவால் வழங்கப்பட்டது . [1] இவர் ஐந்து முறை ஆளுநரை நோக்கிச் சுட்டார், ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. [2] இந்தக் குற்றத்துக்காக இவருக்கு ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. [3] [4]

தன் விடுதலைக்குப் பிறகு 1939 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தாஸ் காங்கிரசு கட்சியில் இணைந்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு, 1942 முதல் 45 வரை மீண்டும் சிறையில் இருந்தார். 1946-47 வரை, வங்காள மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், 1947-51இல் மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்க செயற்பாடாடாளரான, யுகாந்தர் அமைபில் இருந்த ஜதீஷ் சந்திர பவுமிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். [5]

இவரது சகோதரியான கல்யாணி பட்டாச்சார்ஜி எழுதிய பெங்காள் ஸ்பீக்ஸ் என்ற நூலை (1944 இல் பிரசுரிக்கப்பட்டது) இவருக்கு அற்பணித்தார். [6]

சுதந்திர போராட்ட வீராங்கனையான சுஹாசினி கங்குலி இவரது நண்பர். [7]

விருது

தொகு

இவரது சமூகப் பணிகளுக்காக 1960 களில் இவருக்கு பத்மசிறீ விருது அளிக்கப்பட்டது. [8]

இறப்பு

தொகு

இவரது கணவர் இறந்த பிறகு, ரிசிகேசில் தனியாக வாழ்ந்துவந்தவர், பிறருக்கு யாரென்றே தெரியாமல் இறந்துபோனார். 1986 திசம்பர் 26, அன்று சாலையோரத்திலிருந்து இவரது உடல் மீட்கப்பட்டது. இவரது உடலானது இப்பாதையில் வந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது யாருடைய உடல் என்பதை அடையாளம் காண ஒரு மாத காலம் ஆனது. [5]

படைப்புகள்

தொகு

பீனா தாஸ் வங்காள மொழியில் இரண்டு சுயசரிதை படைப்புகளை எழுதியுள்ளார் அவை: ஸ்ரீநிகல் ஜங்கர் மற்றும் பிட்ரிதன் . [5]

குறிப்புகள்

தொகு
  1. Kumar, Radha (1997). The History of Doing: An Illustrated Account of Movements for Women's Rights and Feminism in India 1800-1990.
  2. கவர்னர் கிளாஸ்கோ ஹெரால்ட், 8 பெப்ரவரி 1932, ப. 11
  3. பிப்ரவரி 15, 1932 இல், படித்தல் ஈகிள் என்ற இடத்தில் இந்தியாவில் ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது
  4. "Bina Das, Forgotten female freedom fighters". April 15, 2017.
  5. 5.0 5.1 5.2 செங்குப்தா, சுபோத் சந்திரா மற்றும் அஞ்சலி பாசு (ed.) (1988) சன்சாத் பங்காளி சரிதாப்தின் (பெங்காலி), கொல்கத்தா: சாந்திதா சன்சாத், ப .663
  6. Sengupta, Subodh; Basu, Anjali (2016). Sansad Bangali Charitavidhan (Bengali). Vol. 1. Kolkata: Sahitya Sansad. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7955-135-6.
  7. Chatterjee, India. "The Bengali Bhadramahila —Forms of Organisation in the Early Twentieth Century". Manushi: 33–34. http://www.manushi-india.org/pdfs_issues/PDF%20files%2045/26.%20The%20Bengali%20Bhadramahila.pdf. பார்த்த நாள்: 2019-04-26. 
  8. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனா_தாஸ்&oldid=3563899" இலிருந்து மீள்விக்கப்பட்டது