பீபி சினி பள்ளிவாசல்
பீபி சினி பள்ளிவாசல் (Bibi Chini Mosque) வங்காளதேசத்தின் பர்குனா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான பள்ளிவாசலாகும். தொல்பொருள் தளமான இது பெட்டாகி துணை மாவட்டத்தில் உள்ள பீபி சினி கிராமத்தில் அமைந்துள்ளது.[1] முகலாய கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள பீபி சினி பள்ளிவாசல் சா நேயமத் உல்லா என்ற இசுலாமிய போதகரால் கட்டப்பட்டது.[2]
பீபி சினி பள்ளிவாசல் Bibi Chini Mosque | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பெட்டாகி துணை மாவட்டம், பர்குனா மாவட்டம் |
சமயம் | இசுலாம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 17 ஆம் நூற்றாண்டு |
நிலை | பள்ளிவாசல் |
செயற்பாட்டு நிலை | பாதுகாக்கப்பட்ட பகுதி |
பள்ளிவாசலுக்கு மூன்று அணுகல் புள்ளிகள் உள்ளன. 33 அடி உயரமும், 33 அடி அகலமும் கொண்ட இப்பள்ளி வாசலின் சுவர்கள் சுமார் 6 அடி அகலம் கொண்டவையாகும்.[3] சா சூயா வங்காளத்திற்கும் ஒடிசாவிற்கும் ஆளுநராக இருந்தபோது சா நேயமத் உல்லா 1659 ஆம் ஆண்டு சில சீடர்களுடன் இப்பகுதிக்கு வந்தார். பள்ளிவாசலைக் கட்டிக் கொடுக்கும்படி சூயா அவரிடம் கோரிக்கை விடுத்தார். சா நேயமத் உல்லாவின் மகள் சினி பீபியின் நினைவாக இந்த கிராமம் பெயரிடப்பட்டது. பள்ளிவாசல் இக்கிராமத்தில் அமைந்துள்ளதால் பின்னர் இது பீபி சினி பள்ளிவாசல் என்றும் அழைக்கப்பட்டது. சா நேயமத் உல்லா உல்லா 1700 அம் ஆண்டில் இறந்தார்.[4]
பள்ளிவாசல் முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு பெட்டாகி துணை மாவட்ட நிர்வாகத்தால் புதுப்பிக்கப்பட்டது.[5] 1992 ஆம் ஆண்டில், தொல்லியல் துறை பள்ளிவாசலின் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பொறுப்பை ஏற்று தொல்லியல் தளமாக பட்டியலிட்டது.[5]
படக் காட்சியகம்
தொகு-
நுழைவாயில்
மேற்கோள்கள்
தொகு- ↑ বিবি চিনি মসজিদ, বরগুনা. archaeology.gov.bd (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.
- ↑ (in bn). https://samakal.com/todays-print-edition/tp-lokaloy/article/1701262945.
- ↑ বরগুনা জেলা. Barguna District (in Bengali). Archived from the original on 3 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ (in en)banglanews24.com. https://www.banglanews24.com/islam/news/bd/706126.details.
- ↑ 5.0 5.1 (in bn)Prothom Alo. https://www.prothomalo.com/bangladesh/article/594013/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6.