பீபி முபாரக்கா

முகலாய அரசர் பாபரின் மனைவி

பீபி முபாரிக்கா யூசுப்சாய் (Bibi Mubarika Yusufzai) பஷ்தூன் இனத்தைச் சேர்ந்த இவர் முகலாயப் பேரரசை நிறுவிய முதல் அரசர் பாபரின் ஐந்தாவது மனைவியாவார்.[1]

பீபி முபாரிக்கா யூசுப்சாய்
بيبي مبارکه یوسفزۍ
முகலாயப் பேரரசி
பதவிக்காலம்27 ஏப்ரல் 1526 – 26 திசம்பர் 1530
காபூலின் இராணி
ஆட்சிக்காலம்30 ஜனவரி 1519 – 27 ஏப்ரல் 1526
பிறப்பு16ஆம் நூற்றாண்டு
துணைவர்பாபர்
மரபுபஷ்தூன்
தந்தைஷா மன்சூர் யூசுப்சாய்
மதம்இசுலாம்

உமாயுன்- நாமாவில் அக்பரின் மற்றொரு மனைவியின் மகள் குல்பதான் பேகம் இவரைப்பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறார். அவர் தனது சித்தியை 'ஆப்கானித்தான் பெண்' அல்லது 'ஆப்கானி அகச்சா' என்று அழைக்கிறார்.[2] "ஆப்கான்" என்பது பஷ்தூன் மக்களை குறிக்கும் ஒரு இனப்பெயராகும்.

குடும்பம் தொகு

பீபீ முபாரிக்கா, பஷ்தூன்களின் யூசுப்சாய் பழங்குடியினரின் தலைவரான மாலிக் ஷா மன்சூரின் மகளாவார்.

இவரது சகோதரர்களில் ஒருவரான மிர் ஷா ஜமால் 1525இல் பாபருடன் இந்தியாவிற்கு வந்தார். மேலும் உமாயூனிடமும் அக்பரிடமும் உயர் பதவிகளை வகித்தார். ஜமாலுக்கு கான் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

திருமணம் தொகு

பாபர் இவரை 30 ஜனவரி 1519 அன்று மணந்தார். இந்தத் திருமணம் பாபருக்கும் இவருடைய பழங்குடியினத்திற்கும் இடையிலான நட்பின் அடையாளமாகும். ஒரு புத்திசாலி பெண்ணான இவர், முகலாயர்களுக்கும் யூசுப்சாய் பஷ்துன் தலைவர்களுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். 1529ஆம் ஆண்டில் இந்தியாவில் பாபருடன் முதன்முதலில் இணைந்த பெண்களில் ஒருவராக இருந்தார் என்பதற்கு சான்றாக இவர் பாபரால் மிகவும் விரும்பப்பட்டார் .

இறப்பு தொகு

பீபி முபாரிகா உமாயுனின் ஆட்சியில் வாழ்ந்தார். அக்பரின் ஆட்சியின் ஆரம்பத்தில் இறந்தார்.

பிரபலமான கலாச்சாரத்தில் தொகு

பர்சானா மூன் என்பவரின் பாபர்: தி பர்ஸ்ட் மொகல் இன் இன்டியா என்ற வரலாற்றுப் புதினத்தில் (1977) பீபி முபாரிகா ஒரு கதாபாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Abridged, translated from the Turkish by Annette Susannah Beveridge; edited; Hiro, introduced by Dilip (2006). Babur Nama : journal of Emperor Babur (1.publ. ). New Delhi: Penguin Books. பக். 362. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780144001491. 
  2. Gulbadan Begum (1902). The History of Humayun (Humayun-Nama). Royal Asiatic Society. பக். 266. 
  3. Moon, Farzana (1977). Babur: The First Moghul in India. Atlantic Publishers & Dist. பக். 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-171-56702-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீபி_முபாரக்கா&oldid=3209907" இலிருந்து மீள்விக்கப்பட்டது