பீம்சேன் சோசி

இந்தியப் பாடகர்
(பீம்சென் ஜோஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பீம்சேன் சோசி (Bhimsen Joshi), பெப்ரவரி 4, 1922 - சனவரி 24, 2011) பண்டிட் என்ற மரியாதைக்குரிய முன்னொட்டால் அறியப்பட்ட இவர் கருநாடகாவைச் சேர்ந்த இந்துத்தானி இசை குரலிசைப் பாடகர். இவர், காயல் வகைப் பாடல்களுக்காகவும், பக்தி இசையின் ( பஜனைகள் மற்றும் அபங்கங்கள் ) பிரபலமான இசைப்பாடல்களுக்காகவும் அறியப்படுகிறார். மேலும் 1964 மற்றும் 1982 க்கு இடையில் ஜோஷி ஆப்கானித்தான், இத்தாலி, பிரான்சு, கனடா மற்றும் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்தார். நியூயார்க்கு நகரில் சுவரொட்டிகள் மூலம் கச்சேரிகள் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் இசைக்கலைஞர் இவரே.[1][2] சோசி தனது குருவான சவாய் கந்தர்வனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் சவாய் கந்தர்வ இசை விழாவை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றினார்[3]

பண்டிதர்
பீம்சேன் சோசி
1991இல் சோசி
பிறப்புபீம்சேன் குருராச் சோசி
(1922-02-04)4 பெப்ரவரி 1922
உரோன் கதக் மாவட்டம், கருநாடகம், இந்தியா
இறப்பு24 சனவரி 2011(2011-01-24) (அகவை 88)
புனே, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஇந்துஸ்தானி இசைப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1941–2000
பெற்றோர்குருராச்ராவ் சோசி (தந்தை)
இரமா பாயி (தாயார்)
விருதுகள்
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
 • காயல்
(பஜனைகள் மற்றும் அபங்கங்கள்)
இசைக்கருவி(கள்)

1998 ஆம் ஆண்டில், இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான இந்தியாவின் தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாதமி தனது சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவத்தை இவருக்கு வழங்கியது.[4]

இந்திய அரசு இவருக்கு 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய குடியியல் விருதான பாரத் ரத்னா விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.[5]

இளமைக் காலம்

தொகு

பீம்சேன் சோசி, பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்திலிருந்த[6][7] தார்வாட் மாவட்டத்தின் கதக் மாவட்டத்தில் ஒரு கன்னட[8] தேசஸ்த[9] மத்வ பிராமணக் குடும்பத்தில் குருராச்ராவ் சோசி மற்றும் கோதாவரிபாய் ஆகியோருக்கு 4 பிப்ரவரி 1922 அன்று பிறந்தார். இவரது தந்தை ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தார். 16 உடன்பிறந்தவர்களில் பீமசென்னே மூத்தவர்.[10] சிறு வயதிலேயே தாயை இழந்தார்.

கருநாடக மாநிலத்தின் வட பகுதியிலுள்ள கடகா நகரில் ஒரு கன்னடக் குடும்பத்தில் இவர் பிறந்தார்.[11][12]. அவரது தந்தை குராச்சார்யா ஜோஷி ஒரு பள்ளி ஆசிரியர். 16 உடன் பிறந்தவர்களில் பீம்சேன் மூத்தவர். இவரது உடன்பிறந்தவர்களில் சிலர் இன்றும் அவரது கடகாவிலுள்ள முன்னோர்களின் இல்லத்தில் வசித்துவருகின்றனர்.[13]. பீம்சென் சிறுவயதில் தாயை இழந்தவர், பின்னர் தனது சித்தியால் வளர்க்கப்பட்டார்.

சிறுவயதில், சோசி இசை மற்றும் ஆர்மோனியம் மற்றும் தம்புரா போன்ற இசைக்கருவிகளில் ஈர்க்கப்பட்டார்.[14] மேலும் இசைக்குழுக்களுடன் கூடிய ஊர்வலங்களை அடிக்கடி பின்பற்றுவார். இது அடிக்கடி இவரை சோர்வடையச் செய்தது. மேலும் இவர் எங்காவது படுத்துறங்குவார். இவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தோல்வியுற்றதை அடுத்து இவரது பெற்றோர் காவல்துறைக்கு சென்றனர். சோர்ந்து போன இவரது தந்தை, இவரது சட்டைகளில் "ஆசிரியர் சோசியின் மகன்" என்று எழுதி தீர்வைக் கொண்டு வந்தார். இது பலனளித்தது. சிறுவன் தூங்குவதைக் கண்டவர்கள் இவரைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்தார்கள்.[15]

தொழில் வாழ்க்கை

தொகு

பழம்பெரும் பாடகர் இனாயத்து கானிடம் பயிற்சி பெற்ற குர்தகோடியைச் சேர்ந்த சன்னப்பாதான் இவரது முதல் இசை ஆசிரியர். பைரவ் மற்றும் பீம்பலாசி போன்ற இராகங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, மற்ற ஆசிரியர்களின் மேம்பட்ட பயிற்சிகளையும் பெற்றார்.

சோசி இளவயதில் அப்துல் கரீம் கானின் தும்ரி பாடலான "பியா பின் நஹி ஆவத் செயின்" என்பதை கேட்டு அதில் கவரப்பட்டே பின்னாளில் இசைக் கலைஞராக வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றார். இந்த நேரத்தில், குந்த்கோலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பண்டிட் சவாய் கந்தர்வனின் இசையையும் கேட்டார். 1933 ஆம் ஆண்டில், 11 வயதான இவர், ஒரு ஆசியரைக் கண்டுபிடித்து இசையைக் கற்க தார்வாட்டை விட்டு பிஜாப்பூருக்குச் சென்றார்.

இந்த நேரத்தில், குந்த்கோலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பண்டிட் சவாய் கந்தர்வனின் இசையையும் கேட்டார். 1933 ஆம் ஆண்டில், 11 வயதான சோசி, ஒரு ஆசியரைக் கண்டுபிடித்து இசையைக் கற்க தார்வாட்டை விட்டு பிஜாப்பூருக்குச் சென்றார்.[12][16] தொடர் வண்டியில் சக பயணிகள் கொடுத்த பணத்தின் உதவியுடன், ஜோஷி முதலில் தார்வாடை அடைந்து பின்னர் புனே சென்றார். பின்னர் குவாலியருக்குச் சென்று பிரபல சரோத் கலைஞர் அபீஸ் அலி கானின் உதவியுடன் குவாலியரின் மகாராஜாக்களால் நடத்தப்படும் மாதவ இசைப் பள்ளியில் சேர்ந்தார். தில்லி, கொல்கத்தா, குவாலியர், இலக்னோ மற்றும் இராம்பூர் உள்ளிட்ட வட இந்தியாவைச் சுற்றி மூன்று வருடங்கள் பயணம் செய்து, ஒரு நல்ல குருவைக் கண்டுபிடிக்க முயன்றார்.[17] இராம்பூர் கரானாவின் உஸ்தாத் முஷ்தாக் உசேன் கானைச் சந்தித்து ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கினார். இறுதியில், இவரது தந்தை ஜலந்தரில் இவரைக் கண்டுபிடித்து இளம் சோசியை வீட்டிற்கு அழைத்து வந்தார்.[18]

சவாய் கந்தர்வன்

தொகு

1936 இல், தார்வாட்டைச் சேர்ந்த சவாய் கந்தர்வன், இவரது குருவாக இருக்க ஒப்புக்கொண்டார். குரு-சீடன் பாரம்பரியத்தில் சோசி அவரது வீட்டில் தங்கி பயிற்சியைத் தொடர்ந்தார். அந்த வேளையில் அவரது இல்லத்தில் பகுதி நேரப் பணிகளையும் செய்துவந்தார். கிரானா காரனாவிலிருந்து வந்த மற்றொரு குரலிசைப் பாடகர் கங்குபாய் ஹங்கல் அந்தக் காலகட்டத்தில் பீம்சேனின் சக மாணவராக இருந்தவராவார். அங்கு சோசி தனது பயிற்சியை 1940 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.

தொழில்

தொகு

சோசி முதன்முதலில் 1941 இல் தனது 19 வயதில் நேரடி நிகழ்ச்சியை நடத்தினார். மராத்தி மற்றும் இந்தியில் சில பக்திப் பாடல்களைக் கொண்ட இவரது முதல் இசைத்தொகுப்பு, அடுத்த ஆண்டு 1942 இல் எச்எம்வி இசைத்தட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பின்னர் 1943 இல் மும்பைக்குச் சென்று வானொலிக் கலைஞராக பணியாற்றினார். 1946 இல் இவரது குரு சவாய் கந்தர்வனின் 60 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு கச்சேரியில் இவரது நிகழ்ச்சி பார்வையாளர்களிடமிருந்தும், தனது குருவிடமிருந்தும் பாராடைப் பெற்றது.[19] 1984 இல், தனது முதல் பிளாட்டினம் வட்டைப் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் இந்துஸ்தானி பாடகராக இருந்தார்.[20]

இந்துஸ்தானி இசை

தொகு

டெக்கன் ஹெரால்டின் எஸ். என். சந்திரசேகர் [21] தி இந்து [21] போன்ற பத்திரிக்கையைச் சேர்ந்த இசை விமர்சகர்களால் சோசியின் நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டன.

சோசியின் பாடலில் கேசர்பாய் கெர்கர், பேகம் அக்தர் மற்றும் அமீர் கான் போன்ற பல இசைக்கலைஞர்களின் தாக்கம் உள்ளது. பண்டிட் புருசோத்தம் வால்வால்கர், துளசிதாசு போர்க்கர் ஆகிய இருவரும் இவருடன் சேர்ந்து ஆர்மோனியம் வாசித்தனர்.[22]

பக்தி இசை

தொகு

பக்தி இசையில், சோசி தனது இந்தி மற்றும் மராத்தி மற்றும் கன்னட பஜனைப் பாடலுக்காக மிகவும் பாராட்டப்பட்டார். மராத்தி, சாந்தவாணி, கன்னட தாசவாணி ஆகிய மொழிகளில் பக்தி பாடல்களை பதிவு செய்துள்ளார்.[21]

தேசபக்தி இசை

தொகு

இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட மைல் சுர் மேரா தும்ஹாரா என்ற காணொளியில் (1988) தனது இசை மூலம் இந்தியாவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டார். இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இந்தியக் குடியரசின் 50வது ஆண்டு விழாவில் ஏ. ஆர். ரகுமான் தயாரித்த ஜன கண மன பாடலின் ஒரு பகுதியாகவும் சோசி இருந்தார்.[23]

கௌரவம்

தொகு

செப்டம்பர் 2014 இல், இந்துஸ்தானி இசைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில், சோசியின் பெயர் கொண்ட அஞ்சல்தலை இந்திய அஞ்சல் துறை மூலம் வெளியிடப்பட்டது.[24]

சொந்த வாழ்க்கை

தொகு

சோசி இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவி சுனந்தா கட்டி, இவரது தாய்வழி மாமாவின் மகள். அவரை 1944 இல் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தின் மூலம் இராகவேந்திரன், உஷா, சுமங்களா, மற்றும் ஆனந்த் என நான்கு குழந்தைகள் பிறந்தனர்.[25] 1951 இல், இவர் பாக்யா-ஸ்ரீ என்ற கன்னட நாடகத்தில் த்ன்னுடன் உடன் நடித்த நடிகையா வத்சலா முதோல்கர் என்பவரை மணந்தார். பம்பாய் மாகாணத்தில் இந்துக்கள் மத்தியில் இருதாரத் திருமணங்கள் அப்போதையச் சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தன. எனவே இவர் நாக்பூரில் (மத்திய மாகாணத்தின் தலைநகர் மற்றும் 1951 இல் பெரார்) தனது குடியிருப்பை மாற்றிக் கொண்டார். அங்கு இருதார மணம் அனுமதிக்கப்பட்டது. என்வே அங்கு இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர் சுனந்தாவை விவாகரத்து செய்யவோ பிரிந்து செல்லவோ இல்லை. வத்சலா மூலம் ஜெயந்த், சுபதா மற்றும் சிறீனிவாச சோசி என மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆரம்பத்தில், இவரது இரு குடும்பத்தினரும் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால் இது பலனளிக்காததால், இவரது முதல் மனைவி குடும்பத்துடன் வெளியேறி புனேவின் சதாசிவ் பேத்தில் உள்ள இலிமாயேவாடியில் ஒரு வீட்டில் வசித்தர். அங்கு சோசி அவர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்.[26]

சோசிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. 1970 களின் பிற்பகுதியில் அதை நிறுத்தினார்.[27]

இசைக்கு வெளியே, சோசி தானுந்து வாகனங்கள் மீது பேரார்வம் கொண்டிருந்தார். மேலும் அத்துறையின் எந்திரவியல் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார்.[28]

இறப்பு

தொகு

சோசி இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் நுரையீரல் அழற்சி கரணமாக 31 டிசம்பர் 2010 அன்று சக்யாத்ரி சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை மோசமடைந்து 24 ஜனவரி 2011 அன்று இறந்தார்.[29] புனேவில் உள்ள வைகுண்ட மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.[30]

விருதுகளும் அங்கீகாரங்களும்

தொகு
 
2009இல் ஜோசிக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது

"எஸ். வி. நாராயணசுவாமி ராவ் தேசிய விருது .

மேற்கோள்கள்

தொகு
 1. Darpan, Pratiyogita (January 2009). Pratiyogita Darpan. p. 11. பார்க்கப்பட்ட நாள் 1 January 2009.
 2. Margalit Fox. "Pandit Bhimsen Joshi dies at 88; Indian Classical Singer". The New York Times. https://www.nytimes.com/2011/02/06/arts/music/06joshi.html. 
 3. "Sawai Gandharva Mahotsav renamed – Mumbai – DNA". Dnaindia.com. 19 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.
 4. "SNA: List of Sangeet Natak Academi Ratna Puraskarwinners (Akademi Fellows)". Official website. Archived from the original on 4 March 2016.
 5. "Bharat Ratna for Vocalist Pandit Bhimsen Joshi". ரெடிப்.காம். Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 21 February 2009.
 6. "Bhimsen Joshi passes away". Archived from the original on 10 May 2012.
 7. Fox, Margalit (5 February 2011). "Pandit Bhimsen Joshi Dies at 88; Indian Classical Singer". The New York Times. https://www.nytimes.com/2011/02/06/arts/music/06joshi.html. 
 8. "Bharat Ratna Bhimsen Joshi". Outlook India. https://www.outlookindia.com/website/story/bharat-ratna-bhimsen-joshi/238862. "Bhimsen Gururaj Joshi was born in a Kannadiga Brahmin family on February 4, 1922 in Gadag, an idyllic village in Dharwad district of Karnataka." 
 9. Kasturi Paigude Rane (2021). Pandit Bhimsen Joshi. Publications Division Ministry of Information & Broadcasting. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789354092619. Eldest of 16 siblings, Bhimsen Joshi is born to a family that belonged to a Kannada Deshastha Madhva Brahmin lineage.
 10. Nadkarni, Mohan (1994). Bhimsen Joshi : A Biography. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8172231261.
 11. "Kannadiga family". The Hindu. 2002-10-31. Archived from the original on 2010-01-13. பார்க்கப்பட்ட நாள் 2009-02-21.
 12. 12.0 12.1 "Relentless riyaz- Bhimsen Joshis recipe for success". Deccan Herald. 5 November 2008. Archived from the original on 11 May 2011. பார்க்கப்பட்ட நாள் 5 November 2008.
 13. "Naughty lad turned muse is 'Bharat Ratna'". Deccan Herald. 2008-11-06. {{cite web}}: Unknown parameter |dateaccess= ignored (help)
 14. "Biography – Bhimsen Joshi". Hindi Lyrics. பார்க்கப்பட்ட நாள் 28 February 2014.
 15. Pattanashetti, Girish (25 January 2011). "Ron was his home and his heart". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/gadag-was-his-home-and-his-heart/article1122767.ece. 
 16. Nadkarni, Mohan (1994). Bhimsen Joshi, A biography. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172231262.
 17. "A class apart". Mumbai Mirror. 6 November 2008. Archived from the original on 27 March 2009. பார்க்கப்பட்ட நாள் 18 November 2008.
 18. Anu Kumar (15 April 2019). Wonderkids: 100 Children Who grew Up to Be Champions of Change. Hachette UK. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9388322089.
 19. Chatterji, Shoma A. (7 December 2008). "A living legend". The Sunday Tribune. http://www.tribuneindia.com/2008/20081207/spectrum/main5.htm. 
 20. "Profile of Pandit Bhimsen Joshi | Pune News - Times of India". 25 January 2011. https://m.timesofindia.com/city/pune/profile-of-pandit-bhimsen-joshi/articleshow/7356593.cms. 
 21. 21.0 21.1 21.2 "Haunting melodic grace of Pandit Bhimsen Joshiji". Deccan Herald. 24 January 2011.
 22. "About Panditji's performing career". 5 December 2017.
 23. "Pandit Bhimsen Joshi & Indian cinema". Daily News and Analysis. https://www.dnaindia.com/entertainment/slideshow-pandit-bhimsen-joshi-indian-cinema-1499085. 
 24. Govind, Ranjani (3 September 2014). "Four of eight commemorative stamps feature musical legends from State" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/news/cities/bangalore/four-of-eight-commemorative-stamps-feature-musical-legends-from-state/article6376803.ece. 
 25. Jamkhandi, Gururaj (November 11, 2013). "We want recognition as Pandit Bhimsen's legitimate family" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/We-want-recognition-as-Pandit-Bhimsens-legitimate-family/articleshow/25567713.cms. 
 26. Jamkhandi, Gururaj (11 November 2013). "'We want recognition as Pandit Bhimsen's legitimate family – Interview". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/bangalore/We-want-recognition-as-Pandit-Bhimsens-legitimate-family/articleshow/25567713.cms. 
 27. "Bhimsen Joshi". The Economist. 2011-02-03. https://www.economist.com/obituary/2011/02/03/bhimsen-joshi?story_id=18060826. 
 28. Mukerji, Ranojoy (2011-01-25). "Bhimsen Joshi loved his Mercedes". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 26 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
 29. "Pandit Bhimsen Joshi passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 January 2011 இம் மூலத்தில் இருந்து 27 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227042345/http://articles.timesofindia.indiatimes.com/2011-01-25/pune/28360943_1_kirana-gharana-maestro-pandit-bhimsen-joshi-sawai-gandharva. 
 30. "Pt Bhimsen Joshi's funeral held with all state honours". One India. 25 January 2011 இம் மூலத்தில் இருந்து 13 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120713025231/http://entertainment.oneindia.in/music/news/2011/bhimsen-joshi-funeral-state-honours-250111-aid0062.html. 
 31. 31.0 31.1 31.2 31.3 31.4 "Pandit Bhimsen Joshi: A Profile". ZEE News. 5 November 2008. http://www.zeenews.com/news481046.html. 
 32. "Bhimsen Joshi: Living legend in Indian classical music". DNA India. 10 February 2009.
 33. "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines". The Indian Express. Archived from the original on 3 August 2009.
 34. Times Of India Article
 35. "Award presented to Bhimsen Joshi". தி இந்து (Chennai, India). 2 December 2003 இம் மூலத்தில் இருந்து 4 December 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031204175823/http://www.hindu.com/2003/12/02/stories/2003120208750400.htm. 
 36. "Bhimsen Joshi conferred upon 'Karnataka Rathna'". Zee News. 30 September 2005.
 37. "hinduonnet.com". www.hinduonnet.com. Archived from the original on 28 July 2011.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 38. Bhimsen happy about Delhi govt award

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்சேன்_சோசி&oldid=4043433" இலிருந்து மீள்விக்கப்பட்டது