புக்குஷிமா டா இச்சி அணு உலை

(புக்குஷிமா டா இச்சி அணு ஆலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புக்குஷிமா டா இச்சி அணு ஆலை (ஜப்பானிய மொழி: 福島第一原子力発電所, Fukushima Daiichi Nuclear Power Plant) அல்லது புக்குஷிமா I அணு ஆலை ஜப்பான் நாட்டின் புகுஷிமா மாகாணத்தில் உள்ள நாரக மற்றும் டோமியோக்கா நகரங்களுக்கிடையிலே அமைந்துள்ள அணு ஆலை. 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட 2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் மற்றும் ஆழிப்பேரலையினால் பெரும் சேதத்துக்குள்ளான நான்கு மின் நிலையங்களில் இதுவும் ஒன்று. டோக்யோ எலெக்ட்ரிக் நிறுவனத்தால் நிருவகிக்கப்பட்டும் புக்குஷிமா அணுமின் வளாகத்தில் மிக அதிகமாக சேதமடைந்த அணு ஆலை இதுவே.

Fukushima Daiichi Nuclear Power Station
புக்குஷிமா டா இச்சி அணு உலை is located in Fukushima Prefecture
புக்குஷிமா டா இச்சி அணு உலை
அமைவிடம்:Fukushima Daiichi Nuclear Power Station
நாடுJapan
அமைவு37°25′23″N 141°01′59″E / 37.42306°N 141.03306°E / 37.42306; 141.03306
நிலைUnits 1–4: Severely damaged, decommissioned
Units 5–6: Slightly damaged, decommissioned
அமைப்பு துவங்கிய தேதிசூலை 25, 1967 (1967-07-25)
இயங்கத் துவங்கிய தேதிமார்ச்சு 26, 1971 (1971-03-26)
இயக்குபவர்Tokyo Electric Power Company
இணையதளம்
http://www.tepco.co.jp/en/nu/press/f1-np/index-e.html
Webcam

பாதிப்பு

தொகு

யாரும் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இச்சேதத்தால், புக்குஷிமா அணுக்கரு உலையின் குளிரூட்டு அமைப்புகள் செயலிழந்தன. இதனால் கதிரியக்கம் கசிந்து சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டது. அணு ஆலையைச் சுற்றி 30 கிமீ பரப்பளவுள்ள பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தற்போதைய நிலை

தொகு

சப்பானில் உள்ள ஒரு குழு ஏப்பிரல் 2011 முதல் செப்டம்பர் 2015 வரை எடுக்கப்பட்ட அளவீடுகளைக் கொண்டு சப்பானைச் சுற்றி வாழும் வெவ்வேறு கடல்சார் உயிரினங்களின் மீதுள்ள சீசியப் படிவைக் ஆய்ந்துள்ளனர். பிப்ரவரி 29 அன்று புரசீடிங்சு ஒப் நேசனல் அகாடமி ஆப் சயன்சசில் வெளியிடப்பட்ட இந்த பகுப்பாய்வின் படி மொத்தமாக சீசியப் படிவு மிக குறைந்தே காணப்படுகிறது.[1]

வெளி இணைப்புகள்

தொகு