புதிய உலகம் (நாயகி துனியா)

நாயகி துனியா (Naiki Duniya)(மொழிபெயர்ப்பு : புதிய உலகம்) என்பது 1942-ல் ராகுல சாங்கிரித்யாயனால் எழுதப்பட்ட போச்புரி நாடகமாகும்.[1][2] இது உலகப் போரின் போது ராகுல் சாங்கிரித்யாயன் ஹசாரிபாக் சிறையிலிருந்தபோது எழுதப்பட்டது.இந்நாடகம் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது பொதுவுடைமை கருத்தை ஊக்குவிக்கிறது.[3] இந்த நாடகத்தில், அனைவரும் சமம் என்றும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் உழைப்பாளிகளை வணங்கும் பொதுவுடைமைச் சமுதாயம் கற்பனை செய்யப்பட்டுள்ளது. தேவையான அனைத்து வசதிகளுடன் கிராமம் முழுமையாக வளர்ச்சியடையும் என்பது இந்த திரைப்பட மையக்கருத்தாகும்.[2]

கதாபாத்திரங்கள்

தொகு
  • பாதுக்: முக்கிய கதாபாத்திரம் [4]
  • சோனா: பாதுக்கின் மனைவி
  • ராம்தானி: பாதுக்கின் தந்தை
  • ஜாக்ராணி: பாதுக்கின் பாட்டி
  • ராம்தியோ சிங்: முதியவர்
  • ராமேசர் திவாரி: வயதான பிராமணர்
  • குசாரி: சர்பஞ்ச்
  • மற்ற கதாபாத்திரங்கள்: சுகருல்லா, விஸ்னுடியோ பர்சாத், சுகியா, பதுலியா, மக்தேய் [5]

மேற்கோள்கள்

தொகு
  1. Pathak, Sunil Kumar. Chhavi Aur Chhap. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789383110490.
  2. 2.0 2.1 Ray, Madan. Rahul Ke katha ka Samajika Sandarbh. Radhakrishna Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171192717.
  3. Tiwari, Udaynarayan. Bhojpuri Bhasa aur Sahitya. Bihāra-Rāshtrabhāshā Parishad.
  4. Gaṛabaṛa, Śaṅkara Muni Rāya (2001). Bhojpuri Sahitya me Hasya Vyang. Pankaj Books.
  5. Gaganāñcala, Volume 16. Bhāratīyah Sāṃskr̥tika Sambandha Parishad. 1993.