புதிய ராகம்

புதிய ராகம் (Pudhiya Raagam) 1991 ஆம் ஆண்டு ஜெயசித்ரா எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம். நடிகையான ஜெயசித்ரா இப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். ரகுமான், ரகுவரன் மற்றும் ரூபிணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். குழந்தை நட்சத்திரமாக ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் கணேஷ் இப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. வணிகரீதியில் வெற்றி பெற்ற திரைப்படம்.[1][2][3][4][5]

புதிய ராகம்
இயக்கம்ஜெயசித்ரா
தயாரிப்புஜெயசித்ரா
கதைஜெயசித்ரா
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. எஸ். மணி
வி. ரங்கா
பி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்அம்ரிஷ் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 21, 1991 (1991-06-21)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்தொகு

பாடகி அனுராதாவிற்கும் (ஜெயசித்ரா) ரகுராமனிற்கும் (ரகுவரன்) திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் மகிழ்ச்சியின்றி வாழ்கின்றனர். அனுராதா ஒரு பிரபல பாடகி. ரகுராமனோ கடின உழைப்பின்றி எளிமையாக பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அவனுடைய சகோதரி திருமணத்திற்காக தன் மனைவி அனுராதாவின் பணத்தையும், நகையையும் அவளுக்குத் தெரியாமல் திருடுகிறான். அவனது மோசமான குணத்தைப் பற்றி அறிந்திருந்தாலும் அவளால் அவனை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லை. அனுராதா அவளுடைய முன்னாள் காதலன் ராஜாவை (ரகுமான்) சந்திக்கிறாள். அவனுக்குத் திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளான். அவன் மகனின் பெயர் அனு மோகன் (அம்ரிஷ் கணேஷ்).

கடந்த காலம்: அனுராதாவின் உதவியால் பிரபலமான பாடகனாகிறான் ராஜா. அவள் மீது காதல் கொள்கிறான். ராஜாவின் உறவுப்பெண் ஷீலா (ரூபிணி) அவனைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். ராஜா தன்னைத் திருமணம் செய்ய மறுப்பதால் தற்கொலைக்கு முயல்கிறாள் ஷீலா. இதனால் மற்றவர்களின் கட்டாயத்தின் பேரில் விருப்பமின்றி ஷீலாவைத் திருமணம் செய்துகொள்கிறான் ராஜா.

அனுராதாவின் சகோதரன் கோபிக்கும் (வருண் ராஜ்) ரகுராமனுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அப்போது நடைபெறும் வாக்குவாதத்தில் ரகுராமனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதைக் கூறிவிடுகிறான் கோபி. அதிர்ச்சிக்குள்ளாகிறாள் அனுராதா. ரகுராமன் அவன் செய்த தவறுக்காக கைது செய்யப்படுகிறான். அப்போதும் தன் கணவனை வெறுக்காமல் அவனுக்குத் துணையாக இருக்கிறாள். ராஜாவின் மகனோடு விளையாடும் சமயங்களில் அவள் மகிழ்ச்சியாக உணர்கிறாள். ராஜாவின் மனைவி ஷீலா இறந்துவிட்டாள் என்ற உண்மை அனுராதாவிற்குத் தெரியவருகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

நடிகர்கள்தொகு

இசைதொகு

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர் வாலி மற்றும் கண்மணி சுப்பு.[6][7]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 மாலை சூடும் சித்ரா 4:38
2 வாடுமோ ஓவியம் மனோ, எஸ். ஜானகி 4:56
3 ஓ ஜனனி மனோ 4:55
4 மல்லிகை மாலை கட்டி இளையராஜா 5:01
5 தெய்வங்கள் மனோ, எஸ். ஜானகி 5:01

மேற்கோள்கள்தொகு

  1. "புதிய ராகம்". 2021-01-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "புதிய ராகம்".
  3. "புதிய ராகம்".
  4. "புதிய ராகம்".
  5. "புதிய ராகம்".
  6. "பாடல்கள்".
  7. "பாடல்கள்".

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_ராகம்&oldid=3279060" இருந்து மீள்விக்கப்பட்டது