புதிய வார்ப்புகள்

பாரதிராஜா இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புதிய வார்ப்புகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

புதிய வார்ப்புகள்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புமனோஜ் கிரியேஷன்ஸ்
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைபாரதிராஜா, பாக்யராஜ்
இசைஇளையராஜா
நடிப்புபாக்யராஜ்
ரதி
வெளியீடுஏப்ரல் 14, 1979
நீளம்3936 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தாயமங்கலம் என்னும் கிராமத்துக்கு ஆசிரியர் பணிக்கு சண்முகமணி (பாக்கியராஜ்) வருகிறார். அந்த ஊர் கோயிலில் நாதசுரம் வாசிப்பவரின் மகளான ஜோதியும் சண்முகமணியும் காதலிக்கின்றனர். பெண் பித்தரான ஊர் நாட்டாமை ஜோதியை அடைய விரும்புகிறார். அதற்கு சண்முகமணி இடஞ்சலாக இருப்பதையும் உணருகிறார்.

ஊருக்கு புதியதாக வருகின்ற குடும்பநல சேவகியை வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லும் நாட்டாமை, அந்தப் பழியை சண்முகமணி மீது சுமத்தி ஊரைவிட்டு அனுப்புகிறார். ஊரைவிட்டுச் செல்லும் சண்முகமணி ஜோதியை திரும்பவந்து திருமணம் முடித்து அழைத்துச் செல்வதாக உறுதியளித்து செல்கிறார்.

நடிகர்கள்

தொகு

பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3] "இதயம் போகுதே" பாடல், பிராண்ஸ் சூபேர்ட் அவர்கள் இசையமைத்த சிம்பொனி எண் 8 என்ற பாடலை ஊக்கமாக வைத்து இசையமைக்கப்பட்டது.[4]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "வான் மேகங்களே"  கண்ணதாசன்மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:34
2. "இதயம் போகுதே"  முத்துலிங்கம்ஜென்சி அந்தோனி 4:24
3. "தம்தனம் தான"  கங்கை அமரன்ஜென்சி, பி. வசந்தா 4:12
4. "திருவிழா கூத்து"  கங்கை அமரன்இளையராஜா, கங்கை அமரன், பாரதிராஜா 5:37
மொத்த நீளம்:
18:47

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள்". Archived from the original on 2012-03-03. பார்க்கப்பட்ட நாள் செப்டெம்பர் 4, 2014.
  2. "Puthiya Vaarppukal Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 8 September 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  3. "Puthiya Vaarpugal (1979)". Raaga.com. Archived from the original on 15 August 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2013.
  4. Charles Dhanraj Official (2021-01-16). ilayaraja about Symphony - Idhayam pogudhay - Schubert & Ilayaraja - Unfinished Symphony. பார்க்கப்பட்ட நாள் 2025-02-03 – via YouTube.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_வார்ப்புகள்&oldid=4202621" இலிருந்து மீள்விக்கப்பட்டது