புதுக்கடை (கொழும்பு)

புதுக்கடை (ஆங்கிலம்: Hulftsdorp அல்லது Hulftsdorf) இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ளதொரு நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பு 12 என்ற அஞ்சல் குறியீடு கொண்டு அறியப்படும் நகர்ப்பகுதியாகும். இப்பகுதி வரலாற்றில் அல்ட்சுடார்ப் என அறியப்படுகிறது.[1] தற்காலத்தில் இப்பகுதி கொழும்பின் சட்ட செயலாக்க மையமாக திகழ்கிறது; நாட்டின் உச்ச நீதிமன்றமும் பிற நீதிமன்றங்களும் இங்கு அமைந்துள்ளன.[2]

புதுக்கடை

අලුත්කඩේ

Hultsdorf
நகர்ப்பகுதி
புதுக்கடை is located in Central Colombo
புதுக்கடை
புதுக்கடை
மத்திய கொழும்பில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°56′33″N 79°51′30″E / 6.94250°N 79.85833°E / 6.94250; 79.85833
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்இலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30)
ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட்
புதுக்கடையில் உள்ள டச்சுக்கால "புனிதர்களின் தேவாலயம்"

வரலாறு தொகு

புதுக்கடையின் ஆரம்பகாலப் பெயர் "அல்ஸ்டோர்ப்". டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் இந்தியக் கிளையின் பொறுப்பாளராகவும், இக்கம்பனியின் இலங்கைப் படைத்தளபதியுமாக இருந்த ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் (1621-1656) என்பவரின் நினைவாக[3] இப்பகுதிக்கு டச்சு குடியேற்றவாதிகளால் அல்ஸ்டோர்ப் எனச் சூட்டப்பட்டது. கொழும்பு நகரைப் போர்த்துக்கேயரிடம் இருந்து கைப்பற்ற நடைபெற்ற தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார். இவரது தலைமையகம் இப்பகுதியில் உள்ள குன்றிலேயே அமைந்திருந்தது. டச்சுக் காலத்தில் இது "அல்ஃப்ட்'ஸ் டோர்ப்" (Hulft's Dorp, அல்ஃப்ட்டின் கிராமம்) என வழங்கப்பட்டது.[4].

பாடசாலைகள் தொகு

கொழும்பு ரோயல் கல்லூரி 1835 ஆம் ஆண்டில் புதுக்கடையிலேயே கொழும்பு அக்காடெமி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தற்போதுள்ள கறுவாத் தோட்டம் பகுதிக்கு இடம்பெயர்ந்தது[2].

இங்கு தற்போதுள்ள பாடசாலைகள்:

புதுக்கடையில் வாழ்ந்த பிரபலங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுக்கடை_(கொழும்பு)&oldid=3715074" இருந்து மீள்விக்கப்பட்டது