புதுச்சேரி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (புதுச்சேரி)

புதுச்சேரி மக்களவைத் தொகுதி (Puducherry Lok Sabha constituency), இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1]

புதுச்சேரி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1967
மாநிலம்புதுச்சேரி
சட்டமன்றத் தொகுதிகள்இது புதுச்சேரி அரசின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது

எல்லைகள்

தொகு

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றியத்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். புதுச்சேரி ஒன்றியம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பொதுத் தேர்தல் பதிவான வாக்குகள் வெற்றிபெற்ற கட்சி உறுப்பினர்
1967 4வது மக்களவை 63,286 இந்திய தேசிய காங்கிரசு திருமுடி ந. சேதுராமன்
1971 5வது மக்களவை 1,12,714 இந்திய தேசிய காங்கிரசு மோகன் குமாரமங்கலம்
1977 5வது மக்களவை 1,12,714 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரவிந்த பால பிரஜனர்
1980 7வது மக்களவை 1,64,589 இந்திய தேசிய காங்கிரசு ப. சண்முகம்
1984 8வது மக்களவை 1,59,376 இந்திய தேசிய காங்கிரசு ப. சண்முகம்
1989 9வது மக்களவை 1,90,562 இந்திய தேசிய காங்கிரசு ப. சண்முகம்
1991 10வது மக்களவை 2,07,922 இந்திய தேசிய காங்கிரசு எம். ஓ. எச். பரூக்
1996 11வது மக்களவை 1,83,986 இந்திய தேசிய காங்கிரசு எம். ஓ. எச். பரூக்
1998 12வது மக்களவை 1,31,348 திராவிட முன்னேற்றக் கழகம் எஸ்.ஆறுமுகம்
1999 13வது மக்களவை 1,65,108 இந்திய தேசிய காங்கிரசு எம். ஓ. எச். பரூக்
2004 14வது மக்களவை 4,83,814 பாட்டாளி மக்கள் கட்சி மு. ராமதாஸ்
2009 15வது மக்களவை 6,07,948 இந்திய தேசிய காங்கிரசு வே. நாராயணசாமி
2014 16வது மக்களவை 7,40,017 அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் ரா. ராதாகிருஷ்ணன்
2019 17வது மக்களவை - இந்திய தேசிய காங்கிரசு வெ. வைத்தியலிங்கம்
2024 18வது மக்களவை 8,07,940 இந்திய தேசிய காங்கிரசு வெ. வைத்தியலிங்கம்

வென்ற கட்சிகள்

தொகு
கட்சி வென்ற முறை மக்களவை (தேர்தல் ஆண்டு)
இந்திய தேசிய காங்கிரசு 11 4வது மக்களவை (1967)
5வது மக்களவை (1971)
7வது மக்களவை (1980)
8வது மக்களவை (1984)
9வது மக்களவை (1989)
10வது மக்களவை (1991)
11வது மக்களவை (1996)
13வது மக்களவை (1999)
15வது மக்களவை (2009)
17வது மக்களவை (2019)
18வது மக்களவை (2024)
அதிமுக 1 6வது மக்களவை (1977)
திமுக 1 12வது மக்களவை (1998)
பாமக 1 14வது மக்களவை (2004)
அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் 1 16வது மக்களவை (2014)

14வது மக்களவை தேர்தல்

தொகு

பேராசிரியர் ராமதாஸ் (பாமக) பெற்ற வாக்குகள் - 241,653

லலிதா குமாரமங்கலம் (பாரதிய ஜனதா கட்சி) பெற்ற வாக்குகள் - 172,472

வெற்றி வேறுபாடு: 69,181 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
நாராயணசாமி காங்கிரசு 300,391
பேராசிரியர் ராமதாசு பாமக 208,619
ஆசனா தேமுதிக 52,638
எம். விஸ்வேஸ்வரன் பாரதிய ஜனதா கட்சி 13,442
எம். சௌந்தரம் பகுஜன் சமாஜ் கட்சி 3,697

மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம் [2]

16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

2014 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ். மேலும் அப்போது கூட்டணியில் இருந்த தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளின் துணையோடு அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.

ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதன் மூலம், நாடாளுமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த மாநில கட்சியின் முதல் உறுப்பினர், என்ற பெருமையைப் பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ராதாகிருஷ்ணன் என் ஆர் காங்கிரஸ் 2,55,826
நாராயணசாமி காங்கிரசு 1,94,972
எம். வி. ஓமலிங்கம் அதிமுக 1,32,657
ஏ. எம். எச். நாஜிம் திமுக 60,580
அனந்தராமன் பாமக 22,754
விஸ்வநாதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 12,709

17வது மக்களவைத் தேர்தல்

தொகு

தேர்தல் அட்டவணை

தொகு
தேதி நிகழ்வு
19 மார்ச் 2019 மனுத்தாக்கல் ஆரம்பம்
26 மார்ச் 2019 மனுத்தாக்கல் முடிவு
27 மார்ச் 2019 வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
29 மார்ச் 2019 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
18 ஏப்ரல் 2019 வாக்குப்பதிவு
23 மே 2019 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

18வது மக்களவை தேர்தல்

தொகு

தேர்தல் அட்டவணை

தொகு
தேதி நிகழ்வு
20 மார்ச் 2024 மனுத்தாக்கல் ஆரம்பம்
27 மார்ச் 2024 மனுத்தாக்கல் முடிவு
28 மார்ச் 2024 வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
30 மார்ச் 2024 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
19 ஏப்ரல் 2024 வாக்குப்பதிவு
04 ஜூன் 2024 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

கட்சிகளும் கூட்டணிகளும்

தொகு
கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
இந்திய தேசிய காங்கிரசு இதேகா   மல்லிகார்ச்சுன் கர்கெ 1
கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அஇஅதிமுக   எடப்பாடி க. பழனிசாமி 1
கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
பாரதிய ஜனதா கட்சி பாஜக   ஆ. நமச்சிவாயம் 1

முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : புதுச்சேரி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வெ. வைத்தியலிங்கம் 4,26,005 52.73 3.54
பா.ஜ.க ஆ. நமச்சிவாயம் 2,89,489 35.83 N/A
நாம் தமிழர் கட்சி ஆர். மேனகா 39,603 4.90  2.01
அஇஅதிமுக ஜி. தமிழ்வேந்தன் 25,165 3.11 N/A
நோட்டா நோட்டா (இந்தியா) 9,763 1.21 0.33
வெற்றி விளிம்பு 1,36,516 16.90 8.01
பதிவான வாக்குகள் 8,07,940 78.92 2.33
பதிவு செய்த வாக்காளர்கள் 10,23,699
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "பொது தேர்தல் 2014 >> தொகுதி - புதுச்சேரி". Archived from the original on 2014-05-20. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.
  2. http://eci.nic.in/
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseU071.htm

வெளியிணைப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு