புத்திரகவுண்டன்பாளையம்

சேலம் மாவட்ட சிற்றூர்

புத்திரகவுண்டன்பாளையம் ( Puthiragoundampalayam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது.

புத்திரகவுண்டன்பாளையம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636119

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், பெத்தநாயக்கன்பாளையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 588 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகையானது 2315 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1166 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1149 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 63.9 % ஆகும்.[1] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரின் தனிச்சிறப்பு

தொகு

இந்த ஊரின் முத்துமலையில் முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மலேசியாவின் பத்து மலை முருகன் சிலையைவிட உயரமாக அதாவது 111 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கபட்டுள்ளது. இதுவே தற்போது உலகின் உயரமான முருகன் சிலையாகும். இந்தச் சிலையானது பீடத்துடன் சேர்த்து 146 அடி உயத்தில் உருவாக்கபட்டுள்ளது. இச்சிலையை பத்துமலை முருகனை உருவாக்கிய சிற்பிகளே உருவாக்கியுள்ளனர்.[2]

மேற்கோள்

தொகு
  1. "Puthiragoundampalayam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
  2. "உலகின் மிக உயரமான 146 அடி முருகன் சிலை: பணி தீவிரம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்திரகவுண்டன்பாளையம்&oldid=3597897" இலிருந்து மீள்விக்கப்பட்டது